நாங்கள் வர வேண்டுமா முதலில் நீங்கள் மன்னிப்பு கேளுங்கள் - திமுகவினருக்கு பொன்னார் கண்டிப்பு

Asianet News Tamil  
Published : Oct 23, 2016, 08:26 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
நாங்கள் வர வேண்டுமா முதலில் நீங்கள் மன்னிப்பு கேளுங்கள் - திமுகவினருக்கு பொன்னார் கண்டிப்பு

சுருக்கம்

அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமானால் திமுக தமிழக மக்களுக்கு காவிரி விவகாரத்தில் இழைத்த துரோகத்தை ஒத்துகொண்டால் கரம் கோர்ப்போம் என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவான நிலை எடுத்ததை தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டித்து வருகின்றன. தமிழக பாஜகவுக்கு இதனால் சிக்கல் எழுந்துள்ளது. 

சமீபத்தில் அனைத்து கட்சிகள் 48 மணி நேர ரெயில் மறியலை அறிவித்தன. இதில் பாஜக , அதிமுக ,தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் தவிர மற்ற எல்லா கட்சிகளும் கலந்து கொண்டன. மறியல் நேரத்திலேயே திமுக அனைத்து கட்சியை கூட்டும் என அறிவித்தனர். இதற்கு தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஆட்சியில் இருந்த போதும் மத்தியில் காங்கிரஸ் அரசில் இருந்த போதும் என்ன செய்தார்கள் , அப்போதெல்லாம் எதுவும் செய்யாமல் தற்போது போராட்டம் நடத்துவது அரசியல் ஸ்டண்ட் என்று தமிழிசை பகீரங்கமாக விமர்சனம் செய்திருந்தார். ஆனால் இது பற்றி திமுக தரப்பில் பதிலளிக்கவில்லை. 

இந்நிலையில் காவிரி பிரச்சனையில் ஆளும் அதிமுக  அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாததால் திமுக வரும் 25 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளதாகவும் அதற்கு வரும் படி அனைத்து கட்சிகளுக்கும் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக விவசாயிகளுக்கு காங்கிரஸ், திமுக இரண்டு கட்சிகளும் மிகப்பெரும் துரோகம் இழைத்துள்ளன. கடந்த காலங்களில் நாங்கள் தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ளோம் ஒத்து கொள்கிரோம் இனிவரும் காலங்களில் செய்ய மாட்டோம் என ஒத்துகொள்ளுங்கள் கரம் கோர்க்கிறோம்.

அதை செய்யாமல் அனைத்து கட்சி கூட்டம் என்பது எல்லாம் சாத்தியமில்லாத ஒன்று தமிழகத்துக்கு காவிரி விவகாரத்தில் திமுக செய்த துரோகங்களை பட்டியலிட வேண்டும், அதை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என பொன் . ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதே போல் தமிழிசை சௌந்தரராஜனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலில் காங்கிரஸ் கட்சியினர் கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்திடம் சென்று தண்ணீர் விடும் படி சொல்லட்டும் அப்புறம் மற்றதெல்லாம். அனைத்து கட்சி கூட்டம் என்பது ஒரு அரசியல் ஸ்டண்ட் என்று விமர்சித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?