கதிர் ஆனந்தின் அந்த ரூ.11 கோடி... இன்ஸ்பெக்டரை தூக்கியடித்த துரைமுருகன்..!

By Thiraviaraj RMFirst Published Oct 16, 2020, 2:58 PM IST
Highlights

பிடிபட்ட பலகோடி பணம் தொடர்பாக தற்போது, சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய, இன்ஸ்பெக்டர் நிவாஸ் நடவடிக்கை எடுத்திருக்கிறார். 

வேலுார் மாவட்டம், காட்பாடி இன்ஸ்பெக்டராக நிவாஸ் நியமிக்கப்பட்டார். கடந்த மாதம் காட்பாடி இன்ஸ்பெக்டராக பொறுப்புக்கு வந்தார்.

வந்தவுடன், வேலுார் மக்களவை தொகுதி தேர்தலில் தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது, துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில், வாக்காளர்களுக்கு கொடுக்க, பதுக்கி வைத்திருந்த, பல கோடி ரூபாய் பிடிபட்டது. இதனால் அங்கு தேர்தலையே நிறுத்தி வைத்தது தேர்தல் ஆணையம்.

 

வேலூர் மக்களவைத் தொகுதி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் விவரங்களுடன் கூடிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் சுமார் ரூ.9 கோடி அளவுக்கு புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுகள் இருந்தன. தேர்தல் நேரத்தில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் காட்பாடி காந்தி நகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக காட்பாடி காவல் நிலையத்தில் தேர்தல் செலவுக் கணக்கு அதிகாரி முத்து சிலுப்பன் அளித்த புகாரின்பேரில் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது

மீண்டும் நடந்த மக்களவை தேர்தலில் தான் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வெற்றிபெற்று எம்.பி., ஆனார்.  பிடிபட்ட பலகோடி பணம் தொடர்பாக தற்போது, சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய, இன்ஸ்பெக்டர் நிவாஸ் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதனால், கடுப்பான தி.மு.க., முக்கிய புள்ளி, ஆளுங்கட்சி தரப்பில் பேசி, அந்த இன்ஸ்பெக்டரை, 20வது நாட்களில், திருவண்ணாமலைக்கு டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள். 

click me!