பாஜகவை நோக்கி நடிகர், நடிகைகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.. குஷ்பு குறித்த கேள்விக்கு எல்.முருகன் காரசார பதில்.

By Ezhilarasan BabuFirst Published Oct 16, 2020, 2:17 PM IST
Highlights

குஷ்பு அவர்கள் பாஜகவில் விரும்பி இணைந்துள்ளார் என்றார். குஷ்பு தான் ஒரு பெரியாரிஸ்ட் என்று கூறியிருப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தான் ஒரு பெரியாரிஸ்ட் என்று கூறியிருப்பது அவரது கருத்து, அதை அவர் தெரிவித்திருப்பதாகவும் முருகன் பதில் அளித்தார்.  

தான் ஒரு பெரியாரிஸ்ட் என்ற தன்னுடைய கருத்தை குஷ்பு வெளிபடுத்தியுள்ளார் என தமிழக பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  

சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளையொட்டி அவரின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  நடைபெற்றது அதில் ஏராளமான பாஜக தொண்டர்கள் முக்கிய பிறமுகர்கள் கலந்து கொண்டனர். அதில்  தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கலந்துகொண்டு பேசினார். அதில், தேசத்தை காப்பாற்றும் கட்சி பிஜேபிதான் என்பதை 40 ஆண்டுகள் கழித்து நான் உணருகிறேன், மற்ற சில கட்சிகள் குடும்பத்தை காப்பாற்றும் கட்சியாக உள்ளது, குறிப்பாக 

தெலுங்கு பேசும் மக்களை பாதுகாக்கும் கட்சி பாஜகதான், தெலுங்கு பேசும் 20 சட்டமன்ற உறுப்பினர்களையாவது பாஜகவில் நாம் உருவாக்க வேண்டும் என்றார். அதைத் தொடர்ந்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்துகொண்டிருக்கிறது. பல்வேறு கட்சியின் பிரமுகர்கள் பாரதிய ஜனதா கட்சி நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இதைப்போன்று இளைஞர்கள் ஏராளமானோர் பாரதிய ஜனதா கட்சியை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். 

குறிப்பாக திரை பிரபலங்களும், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள் என்றார், பின்னர் செய்தியாளர்க்களை சந்தித்த அவர், செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். இட ஓதுக்கீடு பறிப்பு விவகாரம் குறித்து எழிப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தொடர்ந்து சமூகநீதிக்கு பாஜகதான் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறது, எப்போதும் சமுக நீதிக்காக குரல் கொடுத்தும் வருகிறது என்றார். குஷ்பு அவர்கள் பாஜகவில் விரும்பி இணைந்துள்ளார் என்றார். குஷ்பு தான் ஒரு பெரியாரிஸ்ட் என்று கூறியிருப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தான் ஒரு பெரியாரிஸ்ட் என்று கூறியிருப்பது அவரது கருத்து, அதை அவர் தெரிவித்திருப்பதாகவும் முருகன் பதில் அளித்தார்.  

 

click me!