கடவுளே இதுமாதிரி கொடுமை யாருக்கும் வரக்கூடாது... கணவர் வெற்றிவேல் உடலை பால்கனியில் பார்த்து கதறிய மனைவி..!

By vinoth kumarFirst Published Oct 16, 2020, 1:55 PM IST
Highlights

கொரோனா பாதித்து உயிரிழந்த அமமுக பொருளாளர் வெற்றிவேலின் உடலை அருகே சென்று பார்க்க முடியாததால், அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் பால்கனியில் இருந்து பார்த்து கதறியது காண்போரை கலங்க வைத்தது.

கொரோனா பாதித்து உயிரிழந்த அமமுக பொருளாளர் வெற்றிவேலின் உடலை அருகே சென்று பார்க்க முடியாததால், அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் பால்கனியில் இருந்து பார்த்து கதறியது காண்போரை கலங்க வைத்தது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினமான வெற்றிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மூச்சு திணறல் காரணமாக அக்டோபர் 6ம் தேதியன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை முதல் வெற்றிவேலின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை 6.40 மணிக்கு வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதையடுத்து அவருடைய உடல் இன்று காலை 9 மணிக்கு ஒப்படைக்கப்பட்டு வாகனம் மூலம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது.கொரோனாவால் இறந்ததால், வாகனத்தில் இருந்து உடல் கீழே எடுத்து வரப்படவில்லை. இதனால் பால்கனியில் இருந்தபடியே குடும்பத்தினர், வெற்றிவேல் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சிஆர் சரஸ்வதி உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் சிலர் மட்டும் அஞ்சலி செலுத்த நேரில் வந்திருந்தனர்.

இதனையடுத்து, வெற்றிவேலின் உடலுக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டு ஓட்டேரியில் உள்ள மின்மாயனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு எரிவூட்டப்பட்டது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரில் வராதபோதும், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெற்றிவேல் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

click me!