கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் திமுகவின் ஐடி விங் ஊழியர்... போலீஸ் விசாரணையில் அம்பலம்..!

Published : Jul 25, 2020, 11:45 AM IST
கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் திமுகவின் ஐடி விங் ஊழியர்... போலீஸ் விசாரணையில் அம்பலம்..!

சுருக்கம்

கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் திமுக ஐடி விங்கில் பணியாற்றியது போலீஸ் விசாரணையில் தெரிய அம்பலமாகியுள்ளது.   

கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் திமுக ஐடி விங்கில் பணியாற்றியது போலீஸ் விசாரணையில் தெரிய அம்பலமாகியுள்ளது. 

கந்த சஷ்டி கவசத்தையும், முருகப்பஎருமானையும் இழிவுபடுத்தி யூ-டியுப் சேனலில் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த செந்தில்வாசனை
போலீஸார் கைது செய்தனர். இவர் திமுகவை சேர்ந்தவர் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அவர் திமுக ஐடி விங் மாநில செயலாளர் பி.டி.பழனிவேல் தியாகராஜனுடன் இருந்த புகைப்படங்கள் வெளியாகின. இருப்பினும் அதனை மறுத்து கறுப்பர் கூட்டம் அமைப்புக்கு திமுக ஆதரவு என பொய் பிரசாரம் செய்வதாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்ப‌ப்படுவதாகவும் அதிமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் போலீஸ் விசாரணையில் செந்தில்வாசன் திமுக ஐடி விங் ஊழியர் என்பது தெரிய வந்துள்ளது. ஆண்டாள் முதல் ஆறுமுகன் வரை இழிவு செய்து இந்துக்களின் திருமண சடங்குகளை இழித்து பேசிய கருப்பு சிவப்பு கூட்டம் தான் ‘கறுப்பர் கூட்டம்’ என்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. 

PREV
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!