பசும்பொன்னில் சாகும்வரை உண்ணாவிரதம்.. கருணாஸ் எடுத்த அதிரடி முடிவு - பரபரப்பு பின்னணி !

By Raghupati R  |  First Published Oct 29, 2022, 11:09 PM IST

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் நடிகர் கருணாஸ் திடீர் உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கடலாடியில் அமைந்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 115ம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 60ம் ஆண்டு குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் இன்று காலை தொடங்கியது.

இதையடுத்து, இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் நாளை (30ம் தேதி) அரசு விழாவாகவும் நடைபெறுகிறது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள் சமுதாய தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்திவிழாவை முன்னிட்டு பசும்பொன்னில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மதுரை விமான நிலையத்தின் மாதிரி தோற்ற விழா மேடையை அமைத்தோம்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க..மதுரை உசிலம்பட்டியில் தெரிந்த எலான் மஸ்க்கின் சாட்டிலைட் - இணையத்தில் வைரலாகும் சூப்பர் வீடியோ !!

ஆனால் நாங்கள் அமைத்த மதுரை விமான நிலைய மாதிரி தோற்றத்தை கமுதி சரக டிஎஸ்பி மணிகண்டன் அவர்கள் அந்த பிரமாண்ட மேடையை ஒரு அரம்பர் கும்பலை போல் வந்து அப்பறப்படுத்திவிட்டார்.  ஒரு மேடையை அப்புறப்படுத்த அந்தப் பகுதி வட்டாட்சியருக்குத்தான் உரிமை உண்ட. அதுவும் முன்னனுமதி கடிதம் கொடுத்து அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் ஒரு காவல் டிஎஸ்பி எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி அராஜகமுறையில் மாதிரி விமான நிலைய மேடையை அப்புறப்படுத்தியது வன்மையாகக் கண்டிக் கத்தக்கது. இது தேவரையே இழிவுப்படுத்தும் செயலாகும். 

முக்குலத்தோர் புலிப்படையின் நீண்ட நாள் கோரிக்கையான “ மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் உ. முத்துராமலிங்க பெயரைச் சூட்ட வேண்டும்! என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கிறேன் இதுவரை மத்திய மாநில அரசுகள் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை! ஆகவே நாங்கள் “ பசும்பொன் உ.  முத்துராமலிங்க தேவர் பெயரில் மதுரை விமான நிலையத்தின் மாதிரி தோற்றத்தை பிரமாண்டமாக அமைத்து விழா வரவேற்பு வாயிலாக அமைத்தோம். 

இதையும் படிங்க..அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்! இதெல்லாம் அபத்தம் - எச்சரித்த தமிழ்நாடு காவல்துறை !!

அரசுக்கு எழுத்துவடிவில் மனுகொடுத்தால் கேட்கவில்லை ஆகவே எனது கோரிக்கையை கலைவடிவில் காணட்டும் என்று மாதிரி விமான நிலையத்தை பசும்பொன்னில் அமைத்துள்ளேன்! அந்த விமான நிலைய மேடையில்தான் அன்னதானம், உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நடக்கவுள்ளன!” இந்நிலையில் திடீரென்று கமுதி டிஎஸ்பி மணிகண்டன் இந்த மாதிரி தோற்றத்தை அப்புறப்படுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆகவே, காவல்துறை அராஜக செயலைக் கண்டித்து  பசும்பொன்னில் எனது சொந்த இடத்தில் 30.10.2022 அன்று சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!