சசிகலாவை தொடர்ந்து இன்று முதல்வர் எடப்பாடியை சந்தித்த கருணாஸ்!!

Asianet News Tamil  
Published : May 23, 2017, 09:46 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
சசிகலாவை தொடர்ந்து இன்று முதல்வர் எடப்பாடியை சந்தித்த கருணாஸ்!!

சுருக்கம்

karunas meeting edappadi palaniswamy

அண்மையில் பெங்களூரு சென்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை பார்த்து வந்த கருணாஸ் எம்எல்ஏ, சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.

முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின தலைவர் நடிகர் கருணாஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து திருவாடாணை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அணியில் இணைந்த கருணாஸ், அதிமுகவில் பிரச்சனை வந்த போது, 122 எம்எல்ஏக்களை கூவத்தூர் தனியார் விடுதியில் வைத்து பராமரித்து வந்தததில் கருணாசுக்கு முக்கிய பங்கு உண்டு என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் கருணாஸ் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்ஐ சந்தித்து அணி மாறப் போவதாகவும் வதந்தி பரவியது.

இந்நிலையில் சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கருணாஸ் இன்று சந்தித்துப் பேசினார்.

அப்போது தனது தொகுதிக்கு தேவையான நிதி ஒதுக்கித் தர வேண்டும் என கருணாஸ்  கோரிக்கை வைத்தாக தெரிகிறது.
ஆனாலும் அண்மையில் பெங்களூரு சென்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை பார்த்து வந்தது குறித்து எடப்பாடியிடம் விளக்கம் அளித்தாகவும் கூறப்படுகிறது.  

PREV
click me!

Recommended Stories

NDA கூட்டணிக்கு துண்டு போடும் தவெக..? அப்போ மாற்று சக்தினு சொன்னது..?
தினமும் ஒரு நிர்பயா... சிதைக்கப்படும் பெண்கன்..! தமிழகத்திற்கு மகளிர் ஆணையத்தை அனுப்புங்கள்.! அதிமு அதிரடி மூவ்!