செம உற்சாகத்தில் உ.பி.க்கள் …! அண்ணாசாலைக்கு வரும் கருணாநிதி…!

Published : Oct 08, 2021, 07:42 AM IST
செம உற்சாகத்தில் உ.பி.க்கள் …! அண்ணாசாலைக்கு வரும் கருணாநிதி…!

சுருக்கம்

சென்னை அண்ணா சாலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்பட உள்ளதாக தகவல்களினால் உடன்பிறப்புகள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

சென்னை: சென்னை அண்ணா சாலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்பட உள்ளதாக தகவல்களினால் உடன்பிறப்புகள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

தலைநகர் சென்னையில் பரபரப்பு மிகுந்த, சென்னையில் அடையாளங்களில் ஒன்று அண்ணா சாலை. இந்த சாலையை தெரியாதவர்கள் என்று சொல்பவர்கள் சென்னையை அறியாதவர்கள் என ஈசியாக அடையாளம் காட்டி விடலாம்.

அப்படிப்பட்ட சென்னை அண்ணாசாலைக்கு புதிய வரவு ஒன்று வர காத்திருக்கிறது. இந்த சாலையில் கடந்த சில நாட்களாக புதிய சிலை ஒன்றை வைக்கும் பணி நடைபெற்றது. கரெக்டாக ஸ்பென்சர் பிளாசா அருகே இந்த பணிகள் நடந்து வருகின்றன.

அந்த பணிகள் என்னவென்று விவரமும் இப்போது கசிந்துள்ளது. அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை வைக்க பணிகள் தான் என்ற விவரம் இப்போது வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படா விட்டாலும் தகவல்கள் எப்படியோ கசிந்து உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்தி உள்ளது.

அண்ணாசாலையில் பெரியார், எம்ஜிஆர் என பல தலைவர்களின் சிலைகள் இருக்கின்றன. ஆனால் கலைஞர் கருணாநிதி சிலை இல்லாதது கண்டு உடன்பிறப்புகள் கடும் ஏக்ககத்தில் இருந்தனர். அவர்களின் ஏக்கம் பிளஸ் கவலையை போக்கும் விதமாக சிலை வைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. மொத்தத்தில் திமுக முகாம் ஹேப்பி மோடில் இருக்கிறது…!

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்