வெள்ளிக்கிழமை ‘ஷாக்’…வரலாறு காணாத விலையில் பெட்ரோல், டீசல்…! கொதிக்கும் வாகன ஓட்டிகள்…

Published : Oct 08, 2021, 07:25 AM IST
வெள்ளிக்கிழமை ‘ஷாக்’…வரலாறு காணாத விலையில் பெட்ரோல், டீசல்…! கொதிக்கும் வாகன ஓட்டிகள்…

சுருக்கம்

சென்னையில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை அதிர வைத்துள்ளது.

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை அதிர வைத்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயித்து வருகின்றன. பல நாட்ளாக பெட்ரோல், டீசல் ஏறுமுகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

அவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. ஆகஸ்ட் 2வது வாரத்தில் இருந்து குறைந்து காணப்பட்ட விலை இப்போது தொடர்நது உச்சத்தில் இருக்கிறது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல், 26 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 26 காசுகளாக இருக்கிறது. டீசல் விலை 34 காசுகள் உயர்ந்து 96 ரூபாய் 60 காசுகளாக உள்ளது.

பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்த போதே வாகன ஓட்டிகள் கடும் கொதிப்பில் இருந்தனர். இப்போது 101 ரூபாயை கடந்துவிட்டதால் உச்சக்கட்ட டென்ஷனில் வாகன ஓட்டிகள் நிலைகுலைந்து போயிருக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!