முதல்முறையாக பொது இடத்தில் கருணாநிதி சிலை.. திறந்து வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Feb 17, 2021, 5:08 PM IST
Highlights

மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைத்ததைப்போல் மதுரையில் சட்டப்போராட்டம் தொடரும் என  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைத்ததைப்போல் மதுரையில் சட்டப்போராட்டம் தொடரும் என  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மதுரையில் சிலை வைக்க திமுக திட்டமிட்டது. அதன்படி மதுரை சிம்மக்கல்லில் மாவட்ட மைய நூலகம் எதிரே சிலை அமைக்க அரசு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து அங்கு சிலை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. 8.5 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பீடம் 12 அடியில் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின்;- தந்தையின் சிலையை திறந்து வைத்த தருணம் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. 

இன்னும் 3 மாதங்களில் கருணாநிதியின் கனவு நிறைவேறப் போகிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற அண்ணாவின் தத்துவப்படி செயல்படுவோம். மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைத்ததைப்போல் மதுரையில் சட்டப்போராட்டம்  நடத்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது என்றார். தமிழகத்திலேயே முதல் முறையாக பொது இடத்தில் கருணாநிதி சிலை அமைக்கப்படுவது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!