டுவிட்டர் டிரெண்டிங்கில் உலகளவில் முதலிடத்தில் இருக்கும் கருணாநிதி

Published : Aug 07, 2018, 08:01 PM IST
டுவிட்டர் டிரெண்டிங்கில் உலகளவில் முதலிடத்தில் இருக்கும் கருணாநிதி

சுருக்கம்

டுவிட்டர் டிரெண்டிங்கில் உலகளவில் கருணாநிதியின் பெயர் முதலிடத்தை பிடித்துள்ளது. 

கருணாநிதியின் மறைவை அடுத்து, அவரது பெயர் உலகளவில் டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தை உள்ளது. 

தமிழக அரசியலைக் கடந்து இந்திய அளவில் முக்கியமான மற்றும் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த கருணாநிதி, இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 

கருணாநிதியின் மறைவிற்கு குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலதரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே, Karunanidhi, Karunanidhi Health, Kauvery Hospital  ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்தன. இந்நிலையில், கருணாநிதி மறைந்ததை அடுத்து, அவருக்கு உலகம் முழுவதிலுமிருந்து பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கருணாநிதியின் மறைவை அடுத்து அவரது பெயர், டுவிட்டர் டிரெண்டிங்கில் உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. Karunanidhi என்ற ஹேஷ்டேக், டுவிட்டர் டிரெண்டிங்கில் உலகளவில் முதலிடத்திலும் RIP Kalaignar என்ற ஹேஷ்டேக் மூன்றாவது இடத்தில் உள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!
எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!