அறிக்கை வராததால் பதற்றம்; ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

Published : Aug 07, 2018, 02:01 PM ISTUpdated : Aug 07, 2018, 04:54 PM IST
அறிக்கை வராததால் பதற்றம்; ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

சுருக்கம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிக்கை வெளியாகாததால் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் கழக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால் ஸ்டாலின் கழக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிக்கை வெளியாகாததால் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 11 நாட்களாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 27 மற்றும் 28ம் தேதிகளில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை தேறியது. எனினும் மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் இருப்பதற்காக மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கருணாநிதியின் உடல்நிலை சீராக இருந்த நிலையில், நேற்று மீண்டும் மோசமடைந்தது. இதையடுத்து நேற்று மாலை 6.30 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட  அறிக்கையில், வயதுமூப்பின் காரணமாக முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது எனவும் மருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கருணாநிதி கண்காணிக்கப்படுவார் எனவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும் எனவும் காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனால் தொண்டர்கள் ஏராளமானவர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்துள்ளனர். காவேரி மருத்துவமனை முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. பல்வேறு இடங்களில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் தமிழக சிறப்பு காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஸ்டாலின் கழக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் சென்னை விரைவதாகவும் கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!
எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!