உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்; மாலை மருத்துவமனை அறிக்கை வெளியாகியது?

Published : Aug 07, 2018, 04:25 PM IST
உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம்; மாலை மருத்துவமனை அறிக்கை வெளியாகியது?

சுருக்கம்

உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம் இருந்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்த அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளது. நேற்று காலை முதலே கருணாநிதிக்கு உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டது.

உச்சக்கட்ட பரபரப்பில் தமிழகம் இருந்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்த அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளது. நேற்று காலை முதலே கருணாநிதிக்கு உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டது. பிறகு காவேரி மருத்தவமனை சார்பில் அறிக்கை வெளியிட்டது. அதில் 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் என்ற பகீர் அறிவிப்பையும் மருத்துவமனை வெளியிட்டது. 

இதனால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனை முன்பு எழுந்து வா தலைவா என்ற முழக்கங்களை தொண்டர்கள் எழுப்பினர். இதனையடுத்து மருத்துவமனைக்கு கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் முதல் திமுக மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள், பிற அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் குவிந்துவிட்டனர். இதனால் போக்குவரத்தும் மாற்றியமைக்கப்பட்டது. மருத்துவமனை முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இதனிடையே நேற்றிரவு 10 மணியளவில் கருணாநிதி உடல்நலம் குறித்து ஒரு அறிக்கை வெளியாகும் அல்லது காலை வெளியாகும் என்ற தகவலும் பரவியது. ஆனால் இதுவரை எந்த ஒரு அறிக்கையும் வெளியாகவில்லை. 

இந்நிலையில் நேற்று முதல் இன்று வரை கருணாநிதிக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், அவற்றினை அவரது உடல் உறுப்புகள் ஏற்றுக் கொள்ளும் தன்மை ஆகியவற்றை பொறுத்துதான் மற்றொரு அறிக்கை மருத்துவமனை தரப்பில் வெளியாகும் என தெரிகிறது. மாலை 6 மணியளவில் புதிய அறிக்கை வெளியாகும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!