ஸ்டாலின் - முதல்வர் சந்திப்பு ..! பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் எடப்பாடி..!

First Published Aug 7, 2018, 3:59 PM IST
Highlights

ஸ்டாலின் உடனான சந்திப்பை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை செய்து வருகிறார். 

ஸ்டாலின் உடனான சந்திப்பை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை செய்து வருகிறார். கருணாநிதியின் உடல் நிலையில் தொடர் பின்னடைவை அடுத்து அவசர அவசரமாக, கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் எடப்பாடியை சந்தித்தார் ஸ்டாலின்.

இந்த சந்திப்பின் போது ஸ்டாலின் உடன் முக அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், ஐ.பெரியசாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.20 நிமிடம் நடைப்பெற்ற இந்த சந்திப்பை அடுத்து, அனைவரும் அவசரமாக வெளியேறினர். இதனை தொடந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணிதுறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை  செய்து வருகிறார்.

மேலும், முதல்வர் உடனான சந்திப்பின் பின், அவசரமாக வெளியேறிய ஸ்டாலின், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்திக்க  செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில், காவேரி மருத்துவமனை சுற்றிலும் போலிஸ் பாதுகாப்பு  பலபடுதப்பட்டு உள்ளது. காவேரி மருத்துவமனை அமைந்துள்ள  ஆழ்வார்பேட்டையில் மட்டும் 300  போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலபடுதப்பட்டு உள்ளது. 

சென்னை முழுக்க ஆயுதப்படை போலீசார் ஆயுதப்படை காவலர்கள் 500 பேரும், தமிழக சிறப்பு காவல்படை வீரர்கள் 700 பேரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் உள்ள 135 காவல் நிலையங்களில் இருந்து தலா 5 காவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

"

தமிழகம் முழுவதிலிருந்தும் தொண்டர்கள் சென்னை நோக்கி படம் எடுக்க தொடங்கி உள்ள நிலையில், சென்னை முழுவதும் பெரும்   பதற்றம் நிலவுகிறது. 

 

click me!