கருணாநிதி குடும்பம் ஆக்டோபஸ்.. ரெட் ஜெயிண்ட் நிறுவனம் அரக்கன்.. போற போக்கில் திமுகவை விளாசிய டிடிவி..!

By vinoth kumar  |  First Published Nov 21, 2022, 11:16 AM IST

அதிமுக தற்போது தலையில்லா முண்டமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி,  ஓ.பன்னீர்செல்வம்  ஆகியோர் தனித்தனியாக அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரை தான் அதிமுக கட்சி தலைவராக தேர்தல் ஆணையம் நியமித்திருந்தது. 


ஆக்டோபஸ் போல் எல்லா துறைகளிலும் இருக்க வேண்டும் என்ற நிலையை கருணாநிதி குடும்பம் இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி உள்ளதாக டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். 

தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் ;- அதிமுக தற்போது தலையில்லா முண்டமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி,  ஓ.பன்னீர்செல்வம்  ஆகியோர் தனித்தனியாக அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரை தான் அதிமுக கட்சி தலைவராக தேர்தல் ஆணையம் நியமித்திருந்தது. தற்போது அதிமுக செயல்படாத இயக்கமாக உள்ளது. 4 மாதத்திற்குள் பொதுச்செயலாளர் தேர்தல் வைக்காததால் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளர் என்று சொல்வது தவறு. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- திமுக அரசை திடீரென பாராட்டிய டி.டி.வி தினகரன்.. என்ன காரணம் தெரியுமா?

வரும் நாடாளுமன்றத்தில் தேர்தலுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. இந்த தேர்தலில் அமமுக முத்திரை பதிக்கும். பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஒரு சிறப்பாக பணியில் ஈடுபடும் என்றார். கருணாநிதி குடும்பம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஆக்டோபஸ் போல் எல்லா துறைகளிலும் நுழைந்து தங்கள் குடும்பமும் தான் இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கிறார்கள். 

இதையும் படிங்க;-  அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போட்ட திமுக அரசு.. டிடிவி.தினகரன் விளாசல்..!

தயாரிப்பாளர்கள் இவர்கள் சொல்லும் தேதியில் தான் ரிலிஸ் செய்ய வேண்டும். இவர்கள் சொன்னால் தான் ரிலீஸ் செய்ய வேண்டும். ஒரு சர்வாதிகாரம் போல் செயல்பட்டு வருகின்றனர். உண்மையாக ரெட் ஜெயிண்ட் நிறுவனம் அரக்கனாக செயல்பட்டு வருகிறது. இதற்கு விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்  என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;-  துரைமுருகனின் துச்சாதனன் புத்தி இன்னும் மாறவில்லை.. தெலுங்கு பட வில்லன் போல பேசும் பொன்முடி.. TTV விளாசல்.!

click me!