கெஞ்சி கேட்ட கருணாநிதி குடும்பம்! நிராகரித்த எடப்பாடி! கொதிக்கும் முன்னாள் அமைச்சர்கள்....!

By sathish kFirst Published Aug 7, 2018, 6:36 PM IST
Highlights

ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தவரும், 80 ஆண்டு அரசியல் அனுபவம் மிக்கவருமான திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நலத்தில் தொடர் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. 

ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தவரும், 80 ஆண்டு அரசியல் அனுபவம் மிக்கவருமான திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நலத்தில் தொடர் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கருணாநிதியின் ஆசை ஒன்றை நிறைவேற்றிட முன்னரே போராடி வருகின்றனர் அவரது அரசியல் நண்பர்களும் குடும்பத்தினரும். மூச்சுக்கு மூச்சு அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர் கலைஞர். அண்ணாவின் அருமை தம்பியான அவர் அண்ணாவின் மரணத்திற்கு பிறகு அவரது நினைவுகளுடன் வாழ்ந்துவருபவர். 

அப்படிப்பட்ட கலைஞருக்காக அண்ணாவின் சமாதியின் அருகே மெரினாவில் இடம் வேண்டும். எனும் கோரிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வைத்திருக்கின்றனர் கலைஞரின் குடும்பத்தாரும், திமுக கட்சியின் முன்னணி தலைவர்களும்.  நேற்று இரவு கூட கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகிய மூன்று அமைச்சர்களும் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். தலைவர் ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவர் அந்த மரியாதைக்காவது இந்த கோரிக்கையை நீங்கள் ஏற்றாக வேண்டும். அவர் அண்ணா மீது கொண்ட பற்று இந்த தமிழகமே அறிந்த ஒன்று. 

யாராவது ஏதாவது தவறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால் கூட, அண்ணா மீது சத்தியம் செய்தால் மன்னித்து விடுவார். அவரின் ஆசையும் அண்ணாவின் அருகிலேயே தான் இருக்க வேண்டும் என்பது தான். அதானால் அந்த கோரிக்கையை தயவு செய்து நிறைவேற்றி வையுங்கள். என கோரி இருக்கின்றனர்.அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”எல்லாம் சட்டப்படிதான் நடக்கும் எனக்கூறி மறுத்திருக்கிறார். வேண்டுமானால் கிண்டியில் காமராஜர் நினைவிடத்தின் அருகில் இடம் ஒதுக்கி தருகிறேன் என்று கூறி இருக்கிறார்.

தொடர்ந்து இந்த மூவரும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரிடம் பேசினர். எப்படியாவது, நீங்க அவர்கிட்ட பேசிப் பாருங்க என்று கேட்டிருக்கின்றனர். அவர்களும் அவ்வாறே கேட்டிருக்கின்றனர். அதற்கு அப்போது, அம்மா இருந்திருந்தா இதுக்கு ஒப்புக்குவாங்களா? இப்படி செய்யும்படி நாமதான் அம்மாகிட்ட கேக்க முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார். இதை தொடர்ந்து கலைஞரின் ஆசையை நிறைவேற்றிட பலவாறாக போராடியிருகின்றனர் திமுகவினர். இந்த போராட்டத்திற்கு வெற்றியாக தற்போது மெரினாவில் இடம் கொடுக்க முதல்வர் சம்மதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

click me!