கோபாலபுரம் வந்தது கருணாநிதி உடல்; கதறி அழுத குடும்பத்தினர்!

Published : Aug 07, 2018, 11:04 PM ISTUpdated : Aug 07, 2018, 11:05 PM IST
கோபாலபுரம் வந்தது கருணாநிதி உடல்; கதறி அழுத குடும்பத்தினர்!

சுருக்கம்

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல் கோபாலபுரம் கொண்டு சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாகியது. 

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி காவேரி மருத்துவமனையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25-ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் கோபாலபுர இல்லத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ரத்த அழுத்தம் காரணமாக 27-ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 11 நாட்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்தார்.

இந்நிலையில் காவேரி மருத்துமனை முழுவதும் திமுக தொண்டர்கள் அலைக்கடல் என திரண்டனர். காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் 5 நிமிடங்கள் போதும். ஆனால் காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல் கோபாலபுரம் கொண்டு சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாகியது. ஏனென்றால் தொண்டர்கள் குவியத் தொடங்கினார். பிறகு கருணாநிதி உடல் கோபாலபுரம் வந்தடைந்தது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்காக கோபாலபுரத்தில் கருணாநிதி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை கண்ட கருணாநிதி குடும்பத்தினர் கதறி அழுதனர். 

பின்னர் அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை சிஐடி நகர் இல்லத்திலும் அதன் பின்னர் காலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலிலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!