வ.உ.சி.-க்கு அன்று கருணாநிதி பெருமை சேர்த்தார்.. இன்று ஸ்டாலின் பெருமை சேர்க்கிறார்.. மகிழும் கனிமொழி.!

By Asianet TamilFirst Published Sep 5, 2021, 9:01 PM IST
Highlights

நாட்டின் சுதந்திரத்துக்காக மட்டுமில்லாமல், தமிழ் மொழிக்காகவும், தமிழின் அடையாளங்களுக்காகவும், சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தொழிலாளர்களுக்காகத் தொடர்ந்து போராடிய பெருந்தலைவர் வ.உ.சி. என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
 

வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் திமுக எம்.பி. கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வ.உ.சி.யின் 100-வது பிறந்த நாள் விழா 1972-ஆம் ஆண்டில் கருணாநிதி தலைமையில் கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அழைத்து வந்து, வ.உ.சி.யின் சிலையைத் திறந்துவைத்துப் பெருமை சேர்த்தார். அந்த வழியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாளை தூத்துக்குடி மக்களே பாராட்டும் அளவுக்கு யாருமே எதிர்பாராத அளவுக்கு, வ.உ.சி.க்குப் பெருமை சேரும் வகையில் 14 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 
வ.உ.சி.யின் பெருமையை நாமெல்லாம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்க வேண்டும். அந்தக் கடமையை உணர்ந்து, வ.உ.சி.யின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டு மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கப்படும். தமிழ்ப் பணியில் தன்னைத் தொடர்ந்து ஈடுபடுத்திக்கொண்ட வ.உ.சி.யின் புத்தகங்களைத் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் மூலம் மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்படும் போன்ற என்று முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வாழ்நாள் முழுவதும் நாட்டின் சுதந்திரத்துக்காக மட்டுமில்லாமல், தமிழ் மொழிக்காகவும், தமிழின் அடையாளங்களுக்காகவும், சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தொழிலாளர்களுக்காகத் தொடர்ந்து போராடிய பெருந்தலைவர் வ.உ.சி. அவருடைய நினைவுகளை நாம் போற்ற வேண்டும். அவரது வழியில் தமிழ்நாட்டின் அடையாளங்களை, பெருமையை நாம் பாதுகாக்க வேண்டும்” என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
 

click me!