"பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாய்"! கருணாநிதிக்கு, ஆ.ராசா கடிதம்!

Asianet News Tamil  
Published : Dec 22, 2017, 10:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
"பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாய்"! கருணாநிதிக்கு, ஆ.ராசா கடிதம்!

சுருக்கம்

Karunanidhi A Raja letter!

பனிக்குடத்தில் வைத்து என்னை பத்திரப்படுத்திய தாயான உங்களுக்க தீர்ப்பை காலடியில் வைக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு, ஆ.ராசா உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு அமைச்சராக திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2-ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ஒரு லட்சத்து ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நேற்று சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தன. இந்த வழக்கு விசாரணை, டெல்லி சிபிஐ தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த வழக்கு தொடரப்க ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட பலர் கைது செய்ப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 5 ஆம் தேதி அறிவித்தார். அதன்படி நேற்று சிபிஐ தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிறது. அதில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ நிரூபிக்க தவறியதால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது. 

2ஜி வழக்கில் விடுவிக்கப்பட்ட ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பனிக்குடத்தில் வைத்து என்னைப் பத்திரப்படுத்திய தாயான உங்களுக்கு தீர்ப்பை காலடியில் வைக்கிறேன். அலைவரிசையில் புயலின் கோரத் தாக்குதல் தனிமனிதர்கள் மட்டுமல்ல தத்துவார்த்தம் கொண்ட இயக்கமும் 7 ஆண்டாக களங்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வீழ்த்தும் சதியில் அலைவரிசை அகப்பட்டுக் கொண்டது என்றும் ஆ.ராசா அந்த கடிதத்தல் உருக்கமாக கூறியுள்ளார்.

நன்றியுணர்ச்சியோடு உங்கள் காலடியில் இந்த தீர்ப்பினை வைத்து வணங்குகிறேன். மீண்டும் உங்கள் வாசகங்கள் என்னை வருடுகின்றன, உண்மையை மறைப்பது விதையை மண்ணுக்குள் புதைப்பதைப் போன்றது என்றும் ராசா தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!