திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்த கார்த்தி சிதம்பரம், தமிழகத்தில் 9 தொகுதிக்கு குறையாமல் போட்டியிடுவோம் என கூறினார்.
தமிழகத்தில் தொகுதி பங்கீடு.?
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் திமுக கூட்டணியில் இணையும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதி ஒதுக்கப்படும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அதிமுக -கூட்டணியில் பாஜக விலகியதால் அதிமுக கூட்டணிக்கு ஒரு சில கட்சிகள் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
எனவே எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதி என்பதில் இன்னமும் முடிவு எட்டப்படாத நிலை உள்ளது. கடந்த முறை பொறுத்த வரை காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைக்கு 2 தொகுதிகளும், மதிமுகவிற்கு ஒரு மக்களவை மற்றும் மாநிலங்களவை தொகுதியும் வழங்கப்பட்டது. இதே போல கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு இடங்கள் கொடுக்கப்பட்டது. எனவே இந்த முறையும் அதன் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுமா அல்லது மாற்றங்கள் செய்யப்படுமா என்ற குழப்பம் உருவாகியுள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 9 தொகுதிக்கு குறையாமல் போட்டியிடுவோம் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் இந்தியா கூட்டனியின் ஒற்றுமை, வலிமை, உரிமையை இந்த மகளீர் உரிமை மாநாடு வெளிப்படுத்தியுள்ளது. மகளீர் இட ஒதுக்கீடு மசோதா குறித்த கேள்விக்கு மகளீர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியிருந்தாலும் அதனை அமல்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்றும் முதலில் மக்கள் தொகை கணக்கீடு செய்ய வேண்டும் அதன் பின்னர் தொகுதி சீரமைக்கப்பட வேண்டும் அதன் பின்னரே அமல்படுத்த முடியும் என கூறினார்.
காங்கிரஸ் எத்தனை தொகுதியில் போட்டி.?
சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சி ஆலோசனை கூட்டம் குறித்த கேள்விக்கு உட்கட்சி விவரங்களை பற்றி நிர்வாகிகள் பேசியதை பத்திரிக்கை வாயிலாக வெளிப்படுத்துவது நாகரிகமல்ல என்று தெரிவித்ததுடன் கூட்டனி குறித்த கேள்விக்கு திமுக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டனி 39 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றிபெரும் என்று தெரிவித்ததுடன் கடந்த தேர்தலைபோல் 9 தொகுதிக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்தார்.
மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளது குறித்த கேள்விக்கு நீட் தேர்வின்போது அபத்தமாக சோதனை செய்துவிட்டு இந்த தேர்வில் எப்படி விட்டார்கள் என்பது தெரியவில்லை என்றும் ஆள் மாறாட்ட விவகாரம் என்பது மத்திய அரசின் நிர்வாக கட்டுப்பாடு மோசமான நிலையில் உள்ளது என்பதையே காட்டுகிறது என குற்றம்சாட்டினார்.
இதையும் படியுங்கள்