சௌகரியத்திற்காக பாஜகவில் இணைந்தவர் அண்ணாமலை… கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!!

By Narendran S  |  First Published Aug 15, 2022, 6:26 PM IST

சௌகரியத்திற்காக பாஜகவில் இணைந்தவர் தான் அண்ணாமலை என காங்கிரஸ் கட்சி சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். 


சௌகரியத்திற்காக பாஜகவில் இணைந்தவர் தான்  அண்ணாமலை என காங்கிரஸ் கட்சி சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதில் சவாரி செய்யலாம் என அண்ணாமலை யோசித்திருந்ததார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: https://tamil.asianetnews.com/career/office-assistant-and-night-watchman-job-in-panchayat-union-rgno5x

Tap to resize

Latest Videos

சித்தாந்தத்தை பற்றி குறிப்பிடும் அண்ணாமலை எந்த சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தார் என்பதை விளக்க வேண்டும். தமிழ்நாடு நிதி அமைச்சர் சொல்லும் புள்ளிவிவரம் மத்திய நிதி அமைச்சருக்கு எரிச்சலை மூட்டுகிறது. மத்திய அமைச்சர் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் புள்ளி விவரங்களால் மட்டும் பதில் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு எப்படி இருந்துச்சு.. இப்போ எல்லாமே திமுக ரவுடியிசம் - கொந்தளிக்கும் ஜெயக்குமார் !

அதைவிடுத்து தேசியக் கொடி கட்டிய காரின் மீது காலனி வீசியது அநாகரீகம் தான் அதை வன்மையாக கண்டிக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ரஜினாகாந்த் அரசியலுக்கு வரவிருப்பதாகவும் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் உடல்நிலையை காரணம் காட்டி அரசியல்லு வரவில்லை, கட்சி ஆரம்பிக்கவில்லை என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

click me!