கோவை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரத்துடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எடுத்துள்ள செல்பி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், என்னது கார்த்திக் சிதம்பரம் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் சேரப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோவை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரத்துடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எடுத்துள்ள செல்பி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், என்னது கார்த்திக் சிதம்பரம் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் சேரப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படம் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ்-பாஜக தேசிய அளவில் பரம்பரை எதிரியாக இருந்து வருகிறது, இந்நிலையில்தான் கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கோவை விமான நிலையம் வருகை தந்தார். அப்போது செய்தியாளரிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், ராகுல் காந்தியின் பெயரில் நடைபெறும் புனித பயணமானது பொதுமக்களை நாடிச் செல்கிற பயணம், நிச்சயம் வெற்றி அது வெற்றி பெறும், அதுவே கட்சிக்கு பலமாக அமையும், பொது மக்களை சந்திக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்: அடித்தால் திருப்பி அடிப்பேன்.. யார் கைகால் பிடித்தும் பதவிக்கு வரல.. மாஸ் காட்டிய அண்ணாமலை.
குலாம் நபி ஆசாத் கட்சியை விட்டு சென்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பியதற்கு கேள்விக்கு பதிலளித்த அவர், கட்சியை விட்டு யார் சென்றாலும் அது கட்சிக்கு பின்னடைவு தான் என்றார், காங்கிரஸ் கட்சி விசித்திரமான முறையில் தமிழகத்தில் உள்ளது என்ற அவர், ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ளோம் என்றுதான் பெயர், ஆனால் அரசாங்கத்தில் பங்கு இல்லை, எதிர்க்கட்சியாகவும் செயல்பட முடியவில்லை, மக்களின் குறைகளையும் முன்வைக்க முடியவில்லை என்றார். தற்போதுள்ள பிரதமரும் நிதி அமைச்சரும் உள்ளவரை மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்ற அவர், பாஜகவுக்கு எதிரான கட்சிகள் மீது அமலாக்கத் துறை சிபிஐ ஏவி விடப்படுகிறது என்றார்.
இதையும் படியுங்கள்: சீமான், பெ. மணியரசன் BJPயின் கைக்கூலி.. பாஜகவுடன் இருந்தவன் உருப்பட்டது இல்ல.. சுப.வீரபாண்டியன்.
நாட்டில் இந்துத்துவா வேரூன்றி இருக்கிறது அதனால்தான் நாங்கள் வைக்கும் வாதங்கள் எடுபடுவதில்லை என வேதனை தெரிவித்தார். அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் வந்திருப்பது பாஜகவின் சாதனைப் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்றார், முன்னதாக கார்த்தி சிதம்பரத்தை வரவேற்க அங்கு ஏராளமான காங்கிரஸார் திரண்டிருந்தனர், அதே நேரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் விமான நிலையத்திற்கு வரவே அங்கு பாஜகவினரும் அதிக அளவில் குவிந்திருந்தனர். அப்போது அவர்கள் அண்ணாமலையை வரவேற்கும் வகையில் பாரத் மாதா கி ஜே என முழங்கி ஆரவாரம் செய்தனர். இதனால் அங்கிருந்த காங்கிரசாரும் எதிர் முழக்கம் எழுப்பினர், இதனால் விமான நிலையத்தில் ஒருவித பதற்றம் நிலவியது.
இந்நிலையில்தான் விமானநிலையத்தில் அண்ணாமலையும்- கார்த்தி சிதம்பரமும் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டனர், அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கார்த்தி சிதம்பரத்துடன் செல்பி எடுத்துக்கொண்டார், தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர், அரசியலில் எதிர் எதிர் துருவங்களில் இருப்பவர்கள் இப்படியுமா இருக்க முடியும்? அரசியலில் என்ன நடக்கிறது என்று பலரும் ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர் பா சிதம்பரம் வீட்டிலேயே பாஜக கை வைத்து விட்டதா என்றும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.