"ஆவணங்களை படிக்க நேரம் அளியுங்கள்" - அமலாக்கத்துறைக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்

Asianet News Tamil  
Published : May 19, 2017, 04:36 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
"ஆவணங்களை படிக்க நேரம் அளியுங்கள்" - அமலாக்கத்துறைக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்

சுருக்கம்

karthi chidamabaram letter to enforcemnet department

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீதான அமலாக்கத்துறையின் பிடி நாளுக்கு நாள் இறுகி வருகிறது. 

ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு அந்நிய முதலீடு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து இருந்தது. 

இதனை முகாந்திரமாக வைத்து இருவர் மீதும் அமலாக்கத்துறையினர்   சட்டவிரோத பணப்பரிமாற்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த வழக்குகளே பெரும் தலைவலியாக இருக்கும் நிலையில், வாசன் ஹெல்த்ஹேர் நிறுவனம் தொடர்பான வழக்கும் கார்த்தி சிதம்பரம் மீது தொடரப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அவருக்கு ஆவணங்கள் அனுப்பியுள்ளது. 

தற்போது லண்டனில் இருக்கும் கார்த்தி சிதம்பரம், குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை படித்து பார்க்க கால அவசாகம் வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்காக களமிறங்கிய இபிஎஸ்.. ஆதவ் அர்ஜுனாவை ஆஃப் செய்த அதிரடி பதில்!
ரஜினியை சீண்டிய ஆதவ் அர்ஜுனா.. பொங்கியெழுந்த பாஜக, கூட்டணி கட்சிகள்.. விஜய்க்கு தலைவலி!