சொன்னபடி செய்யுங்க இல்லனா கட்சியில இருந்து விலகுவேன்...!! தேசிய தலைமைகளை மிரட்டும் எதிர்கட்சித் தலைவர்...!!

By Ezhilarasan BabuFirst Published Mar 2, 2020, 4:25 PM IST
Highlights

எனவே இரு பதவிகளையும் பிரிக்காமல் ஒரே பகுதியாக இருந்தால் மட்டுமே அதில் தொடர முடியும் என சித்தராமையா மேலிடத் தலைவர்களிடம் திட்டவட்டமாக கூறியிருப்பதாக தெரிகிறது.  
 

காங்கிரஸ் கட்சியை விட்டு விலக தயார் என முன்னாள் முதலமைச்சரும் ,   கர்நாடக எதிர்க்கட்சித்  தலைவருமான சித்தராமையா அதிரடியாக தெரிவித்துள்ளார்.  அவரின் இந்த தகவல் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  கர்நாடகாவில் காங்கிரஸ் சட்டப் பேரவை தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை சித்தராமையா வகித்திருக்கிறார் .  இந்நிலையில் கடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி  அடைந்ததைத் தொடர்ந்து தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து அக்கடிதத்தை  கட்சி தலைமைக்கு அனுப்பினார்.

 

ஆனால் அக்கடிதத்தை மேலிடம் ஏற்கவில்லை , அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் பதவியை பிரிக்க வேண்டும் என மேலிடத்தை கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர் .  ஆனால் இரு பதிவுகளையும் பிரித்தால் அறிவித்தால் தனது அரசியல் பலம் குறைந்துவிடும் என சித்தராமையா கருதுகிறார்.   எனவே இரு பதவிகளையும் பிரிக்காமல் ஒரே பகுதியாக இருந்தால் மட்டுமே அதில் தொடர முடியும் என சித்தராமையா மேலிடத் தலைவர்களிடம் திட்டவட்டமாக கூறியிருப்பதாக தெரிகிறது.  

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் ஆகிய பதவிகளை தனித்தனியாக பிரித்து அதற்கு தனித்தனி தலைவர்களை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது . இதில் கட்சியின் மீது  அதிர்ச்சி அடைந்துள்ள சித்தராமையா கட்சியிலிருந்து விலக தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சியில் மேலிடத்திற்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . இந்த தகவலால் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .  அதுமட்டுமல்லாமல் சித்தராமையாவை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில்  காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.  
 

click me!