Exclusive: அதிமுகவில் மத்திய அமைச்சராகப்போகும் இருவர்,,கண்டிசன் போட்டு வாய்ப்பு கொடுக்கும் பாஜக..!!

By Thiraviaraj RMFirst Published Mar 2, 2020, 4:17 PM IST
Highlights

மாநிலங்களவை எம்பி பதவி, யாருக்கு வழங்குவது என்று அதிமுகவில் ‘மல்லுக்கட்டு’ நடைபெற்று வருகின்றது. ஏப்ரல் 2ம் தேதியோடு அதிமுகவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ராஜ்யசபா எம்பிக்கள் பதவிக்காலம் முடிவடைகின்றது. 

T>Balamurukan

மாநிலங்களவை எம்பி பதவி, யாருக்கு வழங்குவது என்று அதிமுகவில் ‘மல்லுக்கட்டு’ நடைபெற்று வருகின்றது. ஏப்ரல் 2ம் தேதியோடு அதிமுகவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ராஜ்யசபா எம்பிக்கள் பதவிக்காலம் முடிவடைகின்றது. மார்ச் 26ம் தேதி அந்த பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் திமுக நேற்று தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்?  என்பதை அறிவித்துவிட்டது. அதில் என்ஆர் இளங்கோ, வழக்கறிஞர். திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் அடங்கிய பட்டியலை  வெளியிட்டார் ஸ்டாலின்.


அதிமுக கையில் இருப்பது 3 சீட். இந்த சீட் எடப்பாடிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆட்சியை வழிநடத்த வேண்டும் என்றால் பாஜகவை பகைத்துக்கொள்ளக்கூடாது. இன்னொரு பக்கம் தனது கட்சியின் மூத்த கட்சி நிர்வாகிகளை திருப்திபடுத்த வேண்டும். இன்னொரு பக்கம் கூட்டணிக்கட்சிகளை குளிர்விக்க வேண்டும். இ;ப்படி இடியாப்ப சிக்கலில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறார்கள் ஒபிஎஸ் இபிஎஸ் அன்கோ.
அதிமுக கூட்டணியில் சவ்வாரி செய்யும் கட்சிகளான பாமக, தேமுதிக,தமாக ஆகிய கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் எடப்பாடி. நாடாளுமன்றம் மற்றும் தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல் வெற்றிக்கு அணில் போல் உதவியவர்கள் தேமுதிக, பாமக, தமாக போன்றவர்கள். இவர்கள் கூட்டணி ஒப்பந்தம் படி ராஜ்யசபா சீட் கேட்கிறார்கள். கிட்டதட்ட பாமகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டு விட்டது.  தேமுதிக எங்களுக்கும் கூட்டணி தர்மம் படி சீட் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிறது. சீட் கேட்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு; வீட்டில் நல்ல பெண் இருந்தால் நிறைய பேர் வந்து கேட்கத்தான் செய்வார்கள் என்றெல்லாம் தேமுதிகவிற்கு பதில் சொல்லி வருகிறார் எடப்பாடி.தேமுதிகவுக்கு, அதிமுக சீட் கொடுக்கவில்லை எனில் கூட்டணியில் நீடிக்காது என்றே தேமுதிக முக்கிய நிர்வாகிகள் சொல்லுகிறார்கள். இன்னும் அதிமுக கையில் இருப்பது 2 சீட் மட்டுமே. இதில் அதிமுக மூத்த நிர்வாகிகளான டாக்டர் மைத்ரேயன்,  முன்னாள் அமைச்சர்கள் கோகுலஇந்திரா, நத்தம் விஸ்வநாதன், அன்வர்ராஜா, தளவாய்சுந்தரம், கே.பி முனுசாமி, தம்பிதுரை ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள்.


தென்தமிழகத்தை பொறுத்தவரைக்கும் அதிமுக பலவீனமாக இருக்கிறது. ராஜகண்ணப்பனுக்கு சீட் கிடைக்காததால் திமுகவிற்கு தாவினார். யாதவர்களுக்கு அதிமுகவில் முக்கியத்துவம் இல்லை எடப்பாடி கவுண்டர்களுக்கும், வன்னியர்களுக்கும் முக்கியத்துவம் தருகிறார். வடமாவட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் எடப்பாடி தென்மாவட்டத்திற்கு வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தார் கண்ணப்பன். இதையெல்லாம் பொய்யாக்க வேண்டும், யாதவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக கோகுலஇந்திரா பட்டியலில் இடம் பெறலாம் என்கிறார்கள் அதிமுக தலைமை நிர்வாகிகள்
கடைக்கோடியில் இருக்கும் கன்னியாகுமரிக்கு முக்கியத்துவம் தரவேண்டும். அதே நேரத்தில் பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அதிமுக அரசை விமர்சனம் செய்து வருகிறார். அந்த மாவட்டத்தில் அதிமுக சார்பில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. அந்த பகுதியில் அதிமுக கோலோச்ச விரும்புவதாகவும் அதற்கு தன்னுடைய நெருங்கிய நண்பராகவும், விசுவாசியாகவும் இருக்கும் தளவாய்சுந்தரத்து இந்த முறை வாய்ப்பு வழங்கலாம் என்று எடப்பாடி நினைக்கிறாராம்.


இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அதிமுக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வில்லை என்கிற அதிருப்தியில் முஸ்லீம் மக்கள் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு எம்பி பதவி கொடுத்து அந்த அதிருப்தியை சரிசெய்யலாம் என்றும் யாருக்கு எம்பி பதவி கொடுக்கலாம் என்று  கட்சியின் மூத்த நிர்வாகிளுடன் ஆலோசனை நடத்தினாராம் எடப்பாடி. அந்த ஆலோசனையில் மீண்டும் அன்வர்ராஜாவுக்கு எம்பி பதவி வழங்கலாமா? என்று பேசியிருக்கிறார். மத்திய அரசு முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்த போது அதை கடுமையாக எதிர்த்து பேசினார் இதன்காரணமாக அப்போதே அமித்ஷாவும், மோடியும், அன்வர்ராஜா மீது கோபத்தில் இருந்தார்கள்.மீண்டும் அன்வர்ராஜாவுக்கு சீட் கொடுத்தால் பாஜக தலைமையை பகைத்துக்கொள்வோம் பார்த்து அடக்கி வாசிங்கனு  சொல்லியிருக்கிறார்கள். பாஜகவை மீறி அன்வர்ராஜாவுக்கு சீட் கொடுத்தால் தான் நாம் முஸ்லீம் பக்கம் இருக்கிறோம் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு வரும் என்று ஒரு கணக்கு போட்டிருக்கிறாராம் எடப்பாடி.


தம்பிதுரை, மைத்ரேயன் ,கேபி.முனுசாமி ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறதாம்.இவர்களில் யாருக்காவது டெல்லி சிறப்பு பிரதிநிதியாகும் வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறது அதிமுக வட்டாரம். வரக்கூடிய சட்டசபை தேர்தல் எப்படி அமையும் என்று தெரியாது. எனவே ஓபிஎஸ் ,எடப்பாடி இருவரும் மத்திய அமைச்சரைவையில் தங்களுக்கான பிரதிநிதிகள் இருக்கவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.

தேனி எம்பியும், ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத்க்கு மத்திய அமைச்சராக இடம் பெறும் வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. தளவாய் சுந்தரமும் மத்திய அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இடம் பிடிக்க இருக்கிறாராம். பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர், 'இரண்டு பேர் அமைச்சர்களாக வருவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்களாம். பிஜேபியில் இருந்து ஒரு கண்டிசன் அதிமுகவிற்கு போடப்பட்டிருக்கிறது. அதாவது சட்டசபை தேர்தலுக்கு நாங்கள்(பாஜக) சொல்லும்படி தான் சீட் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிற கண்டிசன் போடப்பட்டிருப்பதாக டெல்லி வாட்டாரங்கள் தெரிவிக்கின்றது. எடப்பாடி கையில் ராஜ்யசபா எம்பி வேட்பாளர் பட்டியல் ரெடியாகி விட்டது. நாளை அல்லது நாளை மறுநாள் இந்த பட்டியல் வெளியாகும் என்று அதிமுகவினரால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் இடம்பெறப்போகும் அதிர்ஷட்டசாலிகள் யார்?யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!