தலித்துகளை காவு வாங்கியவர்கள், இஸ்லாமியர்கள் மீது பாய்கிறார்கள்...!! அன்சாரியை சமருக்கு நிறுத்தும் போராளி..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 2, 2020, 4:05 PM IST
Highlights

அதனை வலிமையாக எதிர்ப்போம். குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய போராட்டங்களில் வன்முறைகளை கட்டவிழ்த்து விடப் படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நிராகரிக்கப்பட வேண்டியது .

மனிதநேயஜனநாயககட்சி நடத்திய  வாழ்வுரிமை மாநாட்டுக்கு வருகை தர விருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ,மேதா_பட்கர் அவர்களால் வர இயலாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தன் சார்பில் மஜக பொதுச் செயலாளர் முதமிமுன்அன்சாரி MLA அவர்களுக்கு, அவர் அனுப்பிய மாநாட்டு ஆதரவு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது...  சீக்கியர்கள் மீதும், தலித்துகள் மீதும், ஆதிவாசிகள் மீதும், அவர்களின் அதிகாரத்தின் மீதும் நின்று கலவரங்கள் வழியாக உயிர் காவு வாங்கிய அந்த தீய_சக்திகள் தற்போது முஸ்லிம்கள்  மீது பாயதொடங்கி இருக்கின்றனர். 

குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து நாங்கள் களமாடி வருகின்றோம், தமிழகத்தில் அதனை எதிர்த்து கோயம்புத்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின்  வாழ்வுரிமை மாநாட்டுக்கு  எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். குடியுரிமை உரிமை திருத்த சட்டம் என்பது அசாமில் தோல்வியை சந்தித்த ஒன்று,  அதை நாடு முழுவதும் அமல்படுத்த துடிக்கின்ற பாரதிய ஜனதா அரசு நிச்சயமாக தோல்வியை சந்திக்கும். தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு இரண்டையும் ஒன்றோடு ஒன்று  இணைப்பது என்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. 

அதனை வலிமையாக எதிர்ப்போம். குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய போராட்டங்களில் வன்முறைகளை கட்டவிழ்த்து விடப் படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நிராகரிக்கப்பட வேண்டியது .அத்தகைய கொடூர சட்டங்களை தேசிய மக்கள் தன்னெழுச்சி முறியடிக்கும். குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக உங்கள் போராட்ட பயணம் வெற்றிபெற  என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் வாழ்த்தியுள்ளார்.  

click me!