
கர்நாடகா கவர்னர் காத்திருக்கிறார்..!
கர்நாடகாவில் 104 இடங்களை பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க களத்தில் குதித்து உள்ளது.
அதற்கான பேச்சு வார்த்தையில் எம்எல் ஏக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஒரு சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை இப்போது பார்க்கலாம்....
இப்பொழுது கர்நாடகா கவர்னராக இருக்கும் வாஜூபாய் ரூதாபாய் வாலா 1996 ல் குஜராத் மாநில பிஜேபி தலைவராக இருந்த பொழுது இதே தேவகவுடா பிரதமராக இருந்தார். அப்பொழுது குஜராத் முதல்வராக பிஜேபி யின் சுரேஸ் மேத்தா இருந்தார்.
அப்பொழுது 121 எம்எல்ஏக்களுடன் பிஜேபி மெஜார ரிட்டியுடன் தான் இருந்தது.வகேலாவை தூண்டிவிட்ட காங்கிரஸ், பிஜேபி யை உடைத்து அவருடன் 28 பிஜேபி எம்எல்ஏக்களை இழுத்து சட்டசபையில் மெஜாரிட்டியுடன் இருந்த பிஜேபி ஆட்சியை தேவகவுடா வை வைத்து கலைத்தது.
மெஜாரிட்டி யுடன் இருக்கும் ஆட்சியை கலைக்க வேண்டாம் என்று அப்போதைய கவர்னர் கிருஷ்ண பால்சிங்கி டம் நடையாய் நடந்தவர் இப்போதைய கர்நாடக கவர்னர்
அப்பொழுது பிஜேபி ஆட்சியை கலைத்த தேவகவுடா இப்பொழுது தன் மகனை முதல்வராக்க அப்பொழுது குஜராத் மாநில பிஜேபி தலைவரும் இப்போதைய
கவர்னருமான வாஜூபாய் வாலாவின் உதவி கேட்டு காங்கிரஸ் துணையுடன் வருகிறார்..விட்டு விடுமா பாஜக...
.இப்பொழுது காங்கிரஸ்க்கும் தேவகவுடாவுக்கும் பாடம் கற்பிக்க காத்திருக்கிறார் வாஜூபாய் வாலா..என்கிறது.