
கர்நாடகத்தில் பிஜேபி தனிபெரும்பான்மைமை நிரூபிக்க அக்கட்சி 4 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர். அவர்களை பிடித்து ஆட்சியை பிடிக்க பிஜேபி எத்தகைய எல்லைக்கும் போகும் என்பதால் பிஜேபியை பற்றி முழுமையாக தெரிந்த காங்கிரஸ் கட்சி அதன் எம்எல்ஏக்களை பாதுகாத்துக் கொள்ள திட்டமிட்டு வருகிறது. அதன்படி எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்தவுடன் அவர்களை அப்படியே ஈகிள்டன் ரிசார்டுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்தவுடன் மாற்றுகட்சிக்கு செல்லாமல் இருக்க தங்களது ஆதரவு எம்எல்ஏக்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் வைத்து ஆட்சியைக் கைப்பற்றியது சசிகலா டீம். அந்த பார்முலாவை காங்கிரஸ் கட்சியும் மாநிலங்களவை தேர்தலின்போது அமித்ஷா- அகமது பட்டேல் இடையே போட்டி நிலவியபோது செய்தது. அப்போது பாஜகவின் புள்ளைபுடிப்பதில் இருந்து காத்து பத்திரப்படுத்தும் பொறுப்பு மூத்த தலைவர் டி.கே. சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது.
இதற்க்கு முன்பு இதே கர்நாடகவாவில் 2008ஆம் ஆண்டு மீண்டும் கர்நாடகாவுக்குச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான 112 இடங்களுக்கு மேலும் மூன்று எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பாஜகவுக்குத் தேவைப்பட்டது. இதனால் மஜத எம்.எல்.ஏக்கள் நால்வர், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மூவரைத் தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியமைத்தது பாஜக. இவர்கள் அனைவரும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தது.
அப்படி ஒரு அசம்பாவிதம் இந்தமுறை நடந்துவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ், பெங்களுரு டூ மைசூர் ஹைவே விலிருந்து சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் ஷியானமங்களா கிராஸில் இருக்கும் ஈகிள்டன் ரிசார்ட்டில் தங்கவைக்க முயற்சிகள் நடந்நது வருகிறது. இந்த முறையும் கர்நாடக எம்எல்ஏக்களை ஈகிள்டன் ரிசார்டில் வைத்து பாதுகாக்கும் பணியை இவரே ஏற்பார் என்று தெரிகிறது.