
நேற்றைய தேர்தல் எண்ணிக்கை வெளியீட்டை ஒட்டி மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரசும் கூட்டணி அமைக்க முடிவெடுத்திருந்தது. இன்று மஜத ஆலோசனைக்கூட்டம் ஒன்றை கூட்டியது அதில் மதச்சார்பற்ற ஜனதாதளம் சட்டமன்றக்கட்சித் தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார் .இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது
தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறியவர் தேர்தல் முடிவுகள் தமக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை எனவும் காங்கிரஸ் ஆதரவை நாங்கள் ஏற்றுக்கொண்டு உள்ளோம் எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது. கட்சியை உடைக்க பா.ஜ.க முயன்று வருகிறது. எம்.எல்.ஏக்கள் அனைவரியும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்ல ம.ஜ.த முடிவு செய்துள்ளது எனக் கூறியுள்ளார்.
மேகாலயா, மணிப்பூர்,கோவா தனிப்பெரும்பான்மை பெறாமலேயே பா.ஜ.க ஆட்சி அமைக்கிறது. அதே வழியில் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பா.ஜ.க நினைக்கிறது.
100 கோடி ரூபாய் தருகிறேன், அமைச்சர் பதவி தருகிறேன் என பா.ஜ.க பேரம் பேசுகிறது. குதிரை பேரத்தில் ஈடுபடும் நிலையில் வருமான வரித்துறை என்ன செய்கிறது.
பா.ஜ.கவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை.
பா.ஜ.க எங்களிடம் உள்ள ஒரு எம்.எல்.ஏ வை தூக்கினால் இரண்டு பேரை நாங்கள் தூக்குவோம் என அதிரடியாக அறிவித்தார்