கர்நாடகாவில் அரியணை ஏறுவது யார்.? ஜன் கி பாத் - ஏசியாநெட்டின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு

By Raghupati R  |  First Published May 10, 2023, 7:33 PM IST

கர்நாடகாவில் தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த எக்சிட் போலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி வருகிறது. ஜன் கி பாத் - ஏசியாநெட்டின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு பற்றி இங்கு காணலாம்.


224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடந்துள்ளது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

மொத்தம் அம்மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும். கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் பாஜக தற்போது 116 இடங்களுடன் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வரும் நிலையில், அடுத்து யார் ஆட்சி என்ற வாக்காளர்களின் தீர்ப்பு வரும் 13 ஆம் தேதி தெரியும்.

வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி,  ஜன் கி பாத் - ஏசியாநெட் கருத்துக்கணிப்புகளின்படி, பாஜக 94 முதல் 117 இடங்களிலும், காங்கிரஸ் 91 முதல் 106 இடங்கள் வரையிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஜேடி(எஸ்) 14 முதல் 24 இடங்கள் வரை வெற்றி பெறலாம் என்று எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க..கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !!

click me!