தமிழ்நாட்டு மக்கள் மீது கோபமோ,வெறுப்போ இல்லை.! மேகதாதுவால் இரு மாநில மக்களும் பயன் அடைவார்கள்-டிகே சிவக்குமார்

By Ajmal Khan  |  First Published Jun 1, 2023, 3:17 PM IST

 ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு ஒன்றுபடுவோம். கர்நாடகாவில் வாழும் தமிழர்களும், தமிழகத்தில் வாழும் கன்னடர்களும் காவிரி நீரை குடித்து வருகின்றனர். மேகதாது திட்டத்தின் மூலம் இரு மாநிலங்களும் பயனடையும் என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


மேகதாது அணை கட்ட திட்டம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதையடுத்து, கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற நீர்பாசனத் துறை உயர் அதிகாரிகளுக்கான கூட்டத்தில் பேசிய அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்,  மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தியிருந்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தன. தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், சிவக்குமார் அவர்கள் பதவிப்பிரமானம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்.

Latest Videos

undefined

காங்கிரஸ் கட்சி உடனான உறவை முறித்து கொள்வோம் என திமுக எச்சரிக்கனும்.! ஸ்டாலினுக்கு அட்வைஸ் செய்யும் ஓபிஎஸ்

தமிழக அரசு எதிர்ப்பு

மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படதாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும். எனவே தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள கட்டுபாடற்ற நீர்பிடிப்பு பகுதியில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல.கர்நாடகா அரசு மேதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில் இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் முறையிடுவேன். அண்டை மாநிலங்களை சகோதர சகோதரிகளாக வாழ விடுங்கள். உங்களுக்கு இதய உறுதி உள்ளது. எங்களிடம் இதய உறுதியும் உள்ளது. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு ஒன்றுபடுவோம். 

ಮೇಕೆದಾಟು ಯೋಜನೆಗೆ ಹಿಂದಿನ ಸರ್ಕಾರ ಒಂದು ಸಾವಿರ ಕೋಟಿ ರೂ. ಘೋಷಿಸಿದೆ ಆದರೆ ಖರ್ಚು ಮಾಡಿಲ್ಲ. ಯೋಜನೆಯನ್ನು ಸಾಕಾರಗೊಳಿಸಲು ಆ ಹಣ ಬಳಕೆಯಾಗಲಿದೆ. ತಮಿಳುನಾಡಿನ ನಮ್ಮ ಸಹೋದರರ ಮೇಲೆ ಕೋಪವಾಗಲೀ, ದ್ವೇಷವಾಗಲೀ ಇಲ್ಲ. ಅವರೂ ನಮ್ಮ ಅಣ್ಣತಮ್ಮಂದಿರಂತೆ.
1/3

— DK Shivakumar (@DKShivakumar)

 

இரண்டு மாநில மக்கள் பயனடைவார்கள்

கர்நாடகாவில் வாழும் தமிழர்களும், தமிழகத்தில் வாழும் கன்னடர்களும் காவிரி நீரை குடித்து வருகின்றனர். மேகதாது திட்டத்தின் மூலம் இரு மாநிலங்களும் பயனடையும். காவேரி படுகையில் விவசாயிகளுக்கு பாசனமும், சாமானியர்களுக்கு குடிநீரும் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு 1000 கோடி அறிவிக்கப்பட்டது ஆனால் செலவிடப்படவில்லை. அந்த திட்டத்தை செயல்படுத்த பயன்படுத்தப்படும். தமிழ்நாட்டு சகோதரர்கள் மீது கோபமோ வெறுப்போ இல்லை. அவர்கள் நம் சகோதர சகோதரிகளைப் போன்றவர்கள் என்று கர்நாடகா துணை முதல்வரும் நீர் பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

மேதாதுவில் அணையா? கர்நாடகா துணை முதல்வருக்கு துரைமுருகன் கண்டனம்
 

click me!