கர்நாடகாவுக்கு சென்று மேகதாது அணைக்கு எதிராக எதிர்த்து பேசியவன் நான்.. அண்ணாமலை சரவெடி..!

Published : Jun 01, 2023, 03:04 PM ISTUpdated : Jun 01, 2023, 03:06 PM IST
கர்நாடகாவுக்கு சென்று மேகதாது அணைக்கு எதிராக எதிர்த்து பேசியவன் நான்.. அண்ணாமலை சரவெடி..!

சுருக்கம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. மேகதாது எங்களது உரிமை. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் இல்லை என கர்நாடகா துணை முதல்வரும்,  நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் கூறியிருந்தார். 

தமிழக உரிமைகளுக்கு எதிராக கர்நாடகா, கேரளா செயல்பட்டாலும் அது குறித்து முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். 

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. மேகதாது எங்களது உரிமை. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் இல்லை என கர்நாடகா துணை முதல்வரும்,  நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் கூறியிருந்தார். இவரது பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க;- கையாலாகாத திமுக அரசு என்பதை உணர்ந்து கொண்ட கர்நாடகா தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சிக்கிறது.. இபிஎஸ் விளாசல்.!

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தமிழக பாஜகவின் ஓபிசி அணியின் மாநிலத் துணைத் தலைவர் விவேகம் ரமேஷ் அவர்களின் இல்லத் திருமண விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கர்நாடகாவுக்கு சென்றே மேகதாது அணைக்கு எதிராக நான் பேசினேன். கர்நாடகா துணை முதலமைச்சர்  டி.கே.சிவக்குமார் மேகதாது அணை கட்டுவது உறுதி என தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- கிரிக்கெட் வீரருக்கு தமிழக பாஜகவில் புதிய பதவி.! அண்ணாமலை ஒப்புதலோடு அதிரடி அறிவிப்பு வெளியிட்ட அமர் பிரசாத்

டி.கே.சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக காங்கிரஸிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. மேகதாது அணை கட்டப்படுவதை எங்களால் தடுத்து நிறுத்த முடியும். தமிழக உரிமைகளுக்கு எதிராக கர்நாடகா, கேரளா செயல்பட்டாலும் அது குறித்து முதலமைச்சர் வாய் திறப்பதும் இல்லை. எதிர்ப்பதும் இல்லை. அவர் தமிழக உரிமைகளை விட்டு கொடுத்து வருகிறார் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். எஸ்டி, எஸ்சி, நிதியை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தவில்லை. பட்டியலின மாணவர் விடுதிகள் தங்கும் நிலையில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!