நான் என்ன படிச்சுருக்கேன்..? ஆனா முதல்வரா இருக்கேன்.. கெத்து காட்டிய குமாரசாமி

Asianet News Tamil  
Published : Jun 10, 2018, 09:23 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
நான் என்ன படிச்சுருக்கேன்..? ஆனா முதல்வரா இருக்கேன்.. கெத்து காட்டிய குமாரசாமி

சுருக்கம்

karnataka cm kumaraswamy reaction

8ம் வகுப்பு மட்டுமே படித்த ஜிடி.தேவகௌடா கர்நாடகாவில் உயர்கல்வித் துறை அமைச்சரானது குறித்த கேள்விக்கு அம்மாநில முதல்வர் குமாரசாமி அதிரடியாக பதிலளித்துள்ளார். 

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சி என்பதால் அதிகார பகிர்வில் சிக்கல் ஏற்பட்டது. மஜத தலைவர் குமாரசாமியும் கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராகவும் உள்ளனர். நீண்ட இழுபறிக்கு பிறகு, பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததை அடுத்து கடந்த 6ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

காங்கிரஸ், மஜத, பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு நீர்வளத்துறையும் குமாரசாமியின் அண்ணன் ரேவண்ணாவிற்கு பொதுப்பணித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சாமுண்டீஸ்வரி தொகுதியில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை தோற்கடித்த ஜிடி.தெவகௌடாவிற்கு உயர்கல்வித்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

8ம் வகுப்பு மட்டுமே படித்த தேவகௌடா உயர்கல்வித்துறை அமைச்சரானது குறித்து முதல்வர் குமாரசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த குமாரசாமி, நான் என்ன படித்திருக்கிறேன்? ஆனால், முதலமைச்சராக இருக்கிறேன். அவர் உயர்கல்வி அமைச்சர் ஆக இருப்பதனால் என்ன? அவருக்கு நிதித்துறை கொடுக்க வேண்டுமா? குறிப்பிட்ட சில துறைகளுக்கு போட்டி இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அது கட்சி எடுக்கும் முடிவு தான் என்று கூறினார்.  
 

PREV
click me!

Recommended Stories

அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவிட நான்.. என்னை ஒன்றும் செய்யாது..! மு.க.ஸ்டாலின் பெருமிதம்
நாங்க டப்பா எஞ்சினா? திமுக ஆட்சி ஓடாத ஓட்டை எஞ்ஜின்.. முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி!