
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்கள், நடிப்பதில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும், மற்றொரு பக்கம் தன்னுடைய அரசியலுக்கான தூண்களை வலுப்படுத்துவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கான வேலைகளும் ஒரு புறம் தீவிரமாக சென்றுக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே தன்னுடைய கட்சியை வலுப்படுத்தும் விதத்தில், மாவட்டம் தோறும் ரஜினிகாந்த் நிர்வாகிகளை நியமித்துள்ளார். மேலும் சமீபத்தில் கூட, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கும் நிதியுதவி செய்தார்.
இதைத்தொடர்ந்து நேற்றைய முன் தினம் வெளியான 'காலா' திரைப்படமும் ரஜினியின் அரசியல் வருகையை குறிப்பது போல், உள்ளதாக பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய அரசியல் களத்தில் அடுத்த காயை நகர்த்தியுள்ளார் ரஜினிகாந்த். அந்த வகையில் ரஜினி மக்கள் மன்றத்தின் ஊடக பொறுப்பாளராக 'குமுதம் ரிப்போட்டர்' வார இதழின் முன்னால் செய்தி ஆசிரியரும்மான. 'நம்ப அடையாளம்' இதழின் ஆசிரியருமான கோசல்ராம் நியமிக்கப்பட்டு உள்ளார்.
விரைவில் தன்னுடைய அரசியலை பலப்படுத்தும் விதத்தில் ரஜினி, செயல் படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.