ராகுல்காந்தி போதைப்பொருள் கடத்தல்காரர்…. கடுமையாக விமர்சித்த பா.ஜ.க. தலைவர்..!

By manimegalai aFirst Published Oct 19, 2021, 6:06 PM IST
Highlights

ராகுல்காந்தி போதைக்கு அடிமையானவர். சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர் தற்போது ஜாமினில் வெளியே உள்ளார் என்றும் நலின் குமார் காட்டில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராகுல்காந்தி போதைக்கு அடிமையானவர். சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர் தற்போது ஜாமினில் வெளியே உள்ளார் என்றும் நலின் குமார் காட்டில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேர்தல் சமயங்களில் மாநில கட்சிகளாகட்டும் தேசிய கட்சிகளாகட்டும் குற்றச்சாட்டுகளை வாரி இறைப்பதும், சேற்றை அள்ளிவீசுவதும் வழக்கம் தான். ஆனால் பா.ஜ.க. தலைவர்களை பொறுத்தவரையில் எந்த நேரத்தில் எதிர்க்கட்சியினரை வசைபாடுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாதது. அதிலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்த்யை விமர்சிப்பது, மற்றும் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுவது என்றா பா.ஜ.க. தலைவர்களுக்கு சர்க்கரி பொங்கல் சப்பிடுவது போல் இருக்கும். அப்படிதான் கர்நாடக பா.ஜ.க. தலைவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

கர்நாடக பாஜக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நலின் குமார் காட்டில், ஹீப்பள்ளியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்த காட்டில், சர்ச்சைக்கு உரிய வகையிலும் பேசியுள்ளார். ராகுல்காந்தி போதைக்கு அடிமையானவர், அவர் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரன். ஜாமீனில் வெளியே இருக்கிறார். இதெல்லாம் பத்திரிகையிலேயே வெளியாகியிருக்கும் தகவல் வென்று நலின் காட்டில் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு என்று சரியான தலைவரே இல்லாதபோது அவர்கள் பா.ஜ.க.-வை விமர்சிக்கலாமா என்றும் நலின் காட்டில் கேள்வி எழுப்பிஉள்ளார். நலின் குமார் காட்டிலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. ராகுல் காந்தியை தரம் தாழ்ந்து விமர்சித்த நலின் குமார் காட்டிலை பா.ஜ.க. கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

click me!