பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் ஆப்புதான்.. அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published Oct 19, 2021, 5:42 PM IST
Highlights

சென்னை மாநகர பேருந்துகளில் 2,900 கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்ற மாவட்டங்களிலும் அரசு பேருந்துகளில் சிசிடிவி பொருத்தப்படும் என தெரிவித்தார். 

தீபாவளியை முன்னிட்டு மக்களின் தேவைக்கேற்ப போதிய அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனை சாதகமாக பயன்படுத்தும் சில தனியார் பேருந்து நிறுவனங்கள், ‌பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும், அரசுப் பேருந்துகளில் கூட்டம் ‌நிரம்பி வழிவதால், குழந்தைகள் மற்றும் முதியோருடன் ஊருக்கு செல்பவர்கள் வேறு வழியின்றி தனியார் பேருந்துகளை நாடுகின்றனர். ஆகவே ‌தனியார் பேருந்துகளில் கூடும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் குறித்து புகார் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்;- தீபாவளியை முன்னிட்டு மக்களின் தேவைக்கேற்ப போதிய அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளுக்கான புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4256151 என்ற எண்ணில் புகார் பதிவு செய்யலாம். 

சென்னை மாநகர பேருந்துகளில் 2,900 கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்ற மாவட்டங்களிலும் அரசு பேருந்துகளில் சிசிடிவி பொருத்தப்படும் என தெரிவித்தார்.

click me!