சசிகலாவை பார்க்க ஒரே காரில் அதிமுக, அமமுக செயலாளர்கள்... அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Feb 2, 2021, 9:25 AM IST
Highlights

பெங்களூரு ரிசார்ட்டில் தங்கியுள்ள சசிகலாவை சந்திப்பதற்காக கர்நாடக மாநில அதிமுக மற்றும் அமமுக செயலாளர்கள் ஒரே காரில் சென்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரு ரிசார்ட்டில் தங்கியுள்ள சசிகலாவை சந்திப்பதற்காக கர்நாடக மாநில அதிமுக மற்றும் அமமுக செயலாளர்கள் ஒரே காரில் சென்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா பாதிப்பு சிகிச்சை முடிந்து சசிகலா நேற்று காலை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் பெங்களூரு அருகே உள்ள தேவனஹள்ளி என்ற பகுதியில் உள்ள சொகுசு தனியார் விடுதியில் ஓய்வு எடுத்து வருகிறார். வரும் 7-ம் தேதி வரை இங்கு ஓய்வு பெற்று அவர் சென்னை திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், சசிகலாவை காண அதிமுக முக்கிய தலைவர்கள் பெங்களூர் வர உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகின்றனர். இதனிடையே, அதிமுக மாநிலச் செயலாளர் யுவராஜ் மற்றும் கர்நாடக மாநில அமமுக செயலாளர் சம்பத் ஆகியோர் ஒன்றாக அதிமுக கொடி ஏற்றிய ஒரே காரில் சசிகலா ஓய்வெடுத்து வரும் சொகுசு விடுதி முன்பு வந்து இறங்கினர். ஆனால், சசிகலா தனிமையில் இருப்பதால் இருவரையும் சந்திக்க வாய்ப்பு கொடுக்கவில்லை.

இருப்பினும் தமிழகத்தில் எதிரி கட்சிகளாக இருக்கும் அமமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் மாநில செயலாளர்கள் ஒன்றாக சசிகலா ஓய்வுபெறும் விடுதி முன்பு கூடியதை காணும்போது கர்நாடக மாநிலத்தில் இரு கட்சிகளிகளும் ஒன்றாக இணைந்து விட்டதா அல்லது அதிமுக கர்நாடக மாநில செயலாளர் சசிகலா அணியில் இணைந்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறுகையில்;-  அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜை தொடர்கொள்ள முயன்றோம், ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை, அதனால் முழுமையான தகவல் இதுவரை கிடைக்கவில்லை இல்லை. கட்சி கட்டுப்பாடுகளை மீறி ஒருவேளை அவர் சசிகலாவை சந்திக்க சென்றது உறுதியானால் அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

click me!