ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு குஷியான செய்தி... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Feb 1, 2021, 6:13 PM IST
Highlights

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் அரசு கைவிடுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் அரசு கைவிடுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2019ம் ஆண்டு ஜனவரியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது. மேலும் வழக்குகளும் போடப்பட்டது. துறை ரீதியான நடவடிக்கை, வழக்குகளை திரும்ப பெறக்கோரி சங்கங்கள் கோரிக்கை வைத்தன. 

இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் அரசு கைவிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!