
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே 9ம் தேதி 6 மாத சிறைத் தண்டனை விதித்தது.
இதையடுத்து தலைமறைவான கர்ணன் கடந்த 20ம் தேதி கோவை அருகே கைது செய்யப்பட்டார். மறுநாள் கொல்கத்தா பிரசிடென்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் சிறை மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையிலும் அனு மதிக்கப்பட்டார்.
அங்கு கர்ணனுக்கு உடல்நிலை சரியானதும், நேற்று முன்தினம் இரவு மீண்டும் சிறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள், அவரை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “கர்ணன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை இங்கிருந்து விடுவிக்க முடிவு செய்தோம். ஆனாலும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்” என்றார்.