கலகம் செய்ய காத்திருக்கும் கனிமொழி !! தொடர் புறக்கணிப்பால் ஆவேசமான ஆதரவாளர்கள் !!

Published : Sep 18, 2018, 06:16 AM ISTUpdated : Sep 19, 2018, 09:28 AM IST
கலகம் செய்ய காத்திருக்கும் கனிமொழி !!  தொடர் புறக்கணிப்பால் ஆவேசமான ஆதரவாளர்கள் !!

சுருக்கம்

கடந்த 15 ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற  தி.மு.க., முப்பெரும் விழாவில், மகளிர் அணி செயலர் கனிமொழிக்கு, பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இது தொடரும் பட்சத்தில் கழகத்தில் கலகம் விளைவிக்க கனிமொழியின் ஆதரவாளர்கள் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2014  ஆம் ஆண்டு மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, ஸ்டாலின் தனிக்காட்டு ராஜாவாக செயல்பட்டுவந்தார். அந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களையும் தனது ஆதரவாளராக மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில்தான் கருணாநிதி மறைந்தார். இதையடுத்து கடந்த மாதம் 28 ஆம் தேதி திமுக தலைவரானார் ஸ்டாலின். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அழகிரியை அழகாக ஓரம் கட்டினார். கன்மொழியும் சூழ்நிலை அறிந்து அண்ணன் ஸ்டாலினுடன் ஒட்டிக் கொண்டார்.

இந்நிலையில் தி.மு.க., தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், முதல் பொதுக்கூட்டமாக, கடந்த 15ம் தேதி, அக்கட்சியின் முப்பெரும் விழா, விழுப்புரத்தில் நடந்தது. இதில், ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.

ஆனால், ராஜ்யசபா, எம்.பி.,யும், மகளிர் அணி செயலருமான கனிமொழிக்கு, பேச வாய்ப்பு அளிக்காமல், அவரை புறக்கணித்துள்ளனர். இதனால், அதிருப்தி அடைந்துள்ள மகளிர் அணி நிர்வாகிகள் சிலர், விழா ஏற்பாட்டாளர்களிடம், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

பெண்களுக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு வேண்டும் என, தி.மு.க., முன்னணி தலைவர்கள், வாய் கிழிய பேசுகின்றனர்; ஆனால், கட்சி விழாவில், பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். பெண்களை ஒதுக்கினால், அவர்களின் ஓட்டுகள் மட்டும் எப்படி கிடைக்கும்? பெண் வாக்காளர்கள் தான், தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவர்கள். அதை மனதில் வைத்து, பெண்களுக்கு சம உரிமை, அங்கீகாரம் கிடைப்பதற்கு, ஸ்டாலின் வழி செய்ய வேண்டும் என கனிமொழியின் ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர்.

தி.மு.க., பொருளாளர், முதன்மை செயலர் பதவிகளை, முன்னாள் அமைச்சர்கள்  நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் எதிர்பார்த்தனர்; அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால், அவர்களுக்கு, கட்சியில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், துணை பொதுச்செயலர் பதவிகளை வழங்க, கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

தற்போது மகளிர் அணிச் செயலாளராக இருக்கும் கனிமொழிக்கும் திமுகவில் முக்கிய பதவி ஒன்றைத் தர வேண்டும் என்று தற்போது கலகக் குரல் கேட்கத் தொடங்கியுள்ளது. கனிமொழி கவனிக்கப்படுவாரா ? அல்லது ஓரங்கட்டப் படுவாரா ? என்பது போகப் போகத் தான் தெரியும்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!