தலைமறைவு இல்லை !! திண்டுக்கல்லில் கெத்து காட்டும் எச்.ராஜா !!

Published : Sep 17, 2018, 09:09 PM ISTUpdated : Sep 19, 2018, 09:28 AM IST
தலைமறைவு இல்லை !! திண்டுக்கல்லில் கெத்து காட்டும் எச்.ராஜா !!

சுருக்கம்

புதுக்கோட்டை விநாயகர் சதுர்த்தி விழாவில் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக போலீஸ் தெரிவித்துள்ள நிலையில் அவர் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் இந்து முன்னணி பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுள்ளார்..

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வாக்குவாதத்தின் போது, சென்னை உயர் நீதிமன்றம் குறித்து அவர் அவதூறாகவும், மிக மோசமாகவும் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

 

இதையடுத்து நீதிமன்றத்தை அவமதித்தாக எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் எச்.ராஜாவை பிடிக்க 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடத்து அவரை போலீஸ் தேடி வருவதாக அறிவிக்கப்பட்டது.

 

மேலும் எச்.ராஜா மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.ராஜசேகர் என்பவர் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுத்தனர்.


மேலும், எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக தொடர்ந்தால் அதுகுறித்து நீதிமன்றம் விசாரிக்க தயார் என்றும், தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொதுவாக நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளை அவதூறாக பேசினால் தாமாக முன்வந்து விசாரிப்பது வழக்கமாக இருந்துவரும் நிலையில், தற்போது நீதிமன்றம் எச்.ராஜா மீதான இந்த முறையீட்டை மறுத்துள்ளதால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

எச்.ராஜா தலைமறைவாகிவிட்டார், தப்பியோடிவிட்டார், அவர் வேறு ஸ்டேட்டுக்கு சென்றுவிட்டார் என பல ஹேஸ்யங்கள் வெளிவந்த நிலையில், தற்போது அவர் போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல்லில நடைபெறும் இந்து முன்னணி  பொதுக் கூட்டம் ஒன்றில் பேசி வருகிறார். இந்த போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது என சமுக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!