அதிமுகவுக்கு தலைவராகிறாரா ரஜினிகாந்த் ? பாஜகவின் தொடர் மிரட்டலால் மிரண்டு போயிருக்கும் இபிஎஸ் - ஓபிஎஸ் டீம்!!

Published : Sep 17, 2018, 07:28 PM ISTUpdated : Sep 19, 2018, 09:28 AM IST
அதிமுகவுக்கு தலைவராகிறாரா ரஜினிகாந்த் ?  பாஜகவின் தொடர் மிரட்டலால் மிரண்டு போயிருக்கும் இபிஎஸ்  - ஓபிஎஸ் டீம்!!

சுருக்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, குட்கா வழக்கு, உள்ளாட்சித்துறை ஊழல். நெடுஞ்சாலைத்துறை ஊழல் என பல வழக்குகளில் சிக்கித் தவிக்கும் ஆளும் அதிமுக இவற்றிலிருந்து வெளியேறி ஸ்மூத்தாக அரசு நடத்த வேண்டுமென்றால் ரஜினியை அதிமுக தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என பாஜக மேலிடம் தொடர்ந்து மறைமுகமாக மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவும் தமிழக அரசும் முற்றிலும் பாஜகவின் கட்டுப்பாட்டில் போய்விட்டதாக பரவலாக பேசப்படுகிறது. பாஜக சொன்னதை அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொண்டு செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டம் ஆட்சிக்குவரத் துடிக்கிறது. அதனால் பாஜக செல்வாக்கு இல்லா மாநிலங்களில் அங்குள்ள லோக்கல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

பீகாரில் நிதீஸ்குமாருடன் கூட்டணி இன்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பாஜகவுக்குதிமுக கூட்டணி கதவை அடைத்துவிட்டதால்,எப்படியாவது அதிமுகவின் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது.

இதன் ஒரு படியாகத்தான் தமிழகத்தில் ஆட்சியாளர்களை மிரட்டும் வகையில் ரெண்டுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்ட சிலர், நீங்கள் அனைவரும் ரஜினியை அதிமுக தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக மேலிடம் விரும்புகிறது என்றும், அப்படி ஏற்றுக் கொண்டால் சிக்கல் இல்லாமல் ஆட்சியைத் தொடரலாம் என்றும் மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையக் கேட்டு அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமி தனது சகாக்களுடன் விவாதித்தாகவும், வைத்திலிங்கம் போன்றோர் இதைக் கேட்டு கொந்தளித்தாகவும் கூறப்படுகிறது. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கட்சியைப் பலவீனப்படுத்திவிட்டனர் என்றும் அவர் கோபப்பட்டுள்ளார்.

ரகசியமாக உலா வரும் இந்த சம்பவம் அதிமுக அமைச்ச்ர்கள் உள்ளிட்டோரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!
தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்