வழிப்பறியில் ஈடுபடும் மத்திய அரசு... லெப்ட் ரைட் வாங்கிய கனிமொழி..!

By vinoth kumar  |  First Published Feb 18, 2024, 12:21 PM IST

டெல்லியில் விவசாயிகள் ஒரு ஆண்டுக்கு மேலாக பல இன்னல்களுக்கு மத்தியில் போராடினார்கள். அவர்களை முடக்க மத்திய அரசு பல முயற்சி செய்தது. மத்திய அரசு கொண்டு வரும் எந்த சட்டத்தையும் எதிர்க்க கூடாது.


அந்நிய முதலீடு ஆரோக்கியம், கல்வி உள்ளிட்ட எந்த அளவுகோலில் பார்த்தாலும் தமிழகம் முன்னேறிய முதல் மாநிலமாக உள்ளது என கனிமொழி கூறியுள்ளார். 

விருதுநகர் நகராட்சி மைதானத்தில் "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பரப்புரைக் கூட்டம் திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. 

Tap to resize

Latest Videos

undefined

கூட்டத்தில் பேசிய கனிமொழி:  மத்திய அரசுக்கு தமிழகம் ஜி.எஸ். டி மூலம் 1 ரூபாய் கொடுத்தால், திருப்பி மத்திய அரசு கொடுப்பது 26 பைசா மட்டுமே அதே நேரத்தில் உத்தர பிரதேசத்திற்கு 2 ரூபாய் 2 பைசா கொடுக்கப்படுகிறது. காரணம் பின்தங்கிய மாநிலம் என்கிறார்கள். மேலும் இரண்டு முறை பாஜக அந்த மாநிலத்தை ஆட்சி செய்து இன்னும் பின்தங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. உ.பி யை திராவிடம் ஆட்சி செய்திருந்தால் முன்னேறியிருக்கும் என்றார். 

மேலும் பேசிய கனிமொழி தமிழகம் இன்று அந்நிய முதலீடு, ஆரோக்கியம் கல்வி உள்ளிட்ட எந்த அளவுகோலில் பார்த்தாலும் முன்னேறிய முதல் மாநிலமாக உள்ளது. பாஜக அரசுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்றும் பாசிச ஆட்சி நடத்துகிறது. இந்த ஆட்சியால் எந்த பிரிவினருக்கும் நன்மை இல்லை என்றார். டெல்லியில் விவசாயிகள் ஒரு ஆண்டுக்கு மேலாக பல இன்னல்களுக்கு மத்தியில் போராடினார்கள். அவர்களை முடக்க மத்திய அரசு பல முயற்சி செய்தது. மத்திய அரசு கொண்டு வரும் எந்த சட்டத்தையும் எதிர்க்க கூடாது. 

100 நாள் வேலை செய்பவர்களுக்கு மாத கணக்காக ஊதியம் வரவில்லை. தமிழ்நாட்டுக்கு நிதியை கொடுப்பதில்லை. மத்திய அரசு வழிப்பறியில் ஈடுபடுகிறது. பாஜக ஆட்சியில் குறைந்த அளவு நாடாளுமன்ற கூட்டத்தொடரே நடந்துள்ளது. எதிர் கட்சியே இல்லாமல் நாடாளுமன்றம் நடத்திய பெருமை பாஜகவை சேரும். பாசிம் வீழட்டும். இந்தியா கூட்டணி வெல்லட்டும். விருதுநகர் திராவிட இயக்கத்துடன் பயணம் செய்யக் கூடிய மண். மத்தியில் உள்ள பாசிச பாஜக அரசை விரட்டுவோம். இந்தியாவை மீட்போம் என கனிமொழி கடுமையாக விமர்சித்தார். 

click me!