நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பிரதான கட்சியான திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதே கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. திமுக கூட்டணியில் புதிதாக மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பிரதான கட்சியான திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதே கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. திமுக கூட்டணியில் புதிதாக மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்துள்ளது. திமுக தனது கூட்டணி கட்சியுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்கவுள்ளது.
ஆனால் அதிமுக மற்றும் பாஜக தங்களது கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. கடந்த 5 வருடமாக பாஜக கூட்டணியில் தொடர்ந்த அதிமுக தற்போது விலகிய நிலையில், இந்த இரண்டு கட்சிகளும் புதிய கூட்டணியை உருவாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் கூடுதல் தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கும் கட்சியோடு தான் கூட்டணி என்று திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.
ஆனால் இதற்கு அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் கூட்டணியில் இறுதி செய்யப்படாமல் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பாஜக கூட்டணிக்கு செல்வது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைக்க ஜி.கே.வாசன் மேற்கொண்ட முயற்சிகள் கைகூடாத நிலையில் பாஜக கூட்டணியில் தமாகா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.