அதிமுக கூட்டணிக்கு ஓகே சொன்ன பாமக, தேமுதிக.? அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த அன்புமணி, பிரேமலதா

By Ajmal KhanFirst Published Feb 18, 2024, 7:52 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு பாமக மற்றும் தேமுதிக ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி பாமகவிற்கு 7 நாடாளுமன்ற தொகுதியும் ஒரு மாநிலங்களவை ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாத மத்தியில் வெளியிடப்படுகிறது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரம் காட்டி வருகிறது. கூட்டணி, தொகுதிப்பங்கீடு என சூடு பிடித்துள்ள நிலையில், தமிழகத்தில் 4 முனை போட்டி உறுதியாகியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஆளும்கட்சியாக உள்ள திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இதே போல நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என அறிவித்து விட்டது.

தேமுதிக- பாமக நிலை என்ன.?

அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக தங்களது கூட்டணியை இன்னும் உறுதி செய்யாத நிலை உள்ளது. இதன் காரணமாக கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக தங்கள் கூட்டணிக்கு பாமக மற்றும் தேமுதிகவை இழுக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரண்டு தரப்பில் இருந்தும் அழைப்பு வருவதன் காரணமாக பாமக மற்றும் தேமுதிக தங்களுக்கான தொகுதிகளை அதிகரித்துள்ளது. மேலும் இரண்டு கட்சிகளும் மாநிலங்களவை தொகுதியும் கேட்டுள்ளது. இதனால் இரண்டும் தரப்புக்கும் கூட்டணி முடிவு ஏற்படாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்தநிலையில் தேமுதிக தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அதிமுக கூட்டணிக்கு ஓகே

மேலும் பாமகவை பொறுத்துவரை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸை அதிமுக மூத்த நிர்வாகி சி.வி.சண்முகம் சந்தித்து பேசியிருந்தார். மேலும் நேற்று முன்தினம் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது கூட்டணி தொடர்பாக பேசியதாக தெரிகிறது. இதில் பாமகவிற்கு கடந்த முறை ஒதுக்கீடு செய்யப்பட்டதைப்போல் 6 மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அதிமுக கூட்டணிக்கு பாமக மற்றும் தேமுதிக ஓகே சொல்லவிட்டதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

இணைந்து பயணிப்போம்.! இந்தியாவை வெற்றிபெறச் செய்வோம்..! செல்வப்பெருந்தகைக்கு ஸ்டாலின் கூறிய செய்தி என்ன.?

click me!