நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சூடு பிடிக்கும் அரசியல் களம்
நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் அறிவிப்படவுள்ள சூழ்நிலையில், தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை தொடங்கிவிட்டது. கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி திமுகவுடன் தனது முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. அதன் படி கடந்த 5 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வந்த கே.எஸ் அழகிரி மாற்றப்பட்டு புதிய தலைவராக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டாலின் கூறியது என்ன.?
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் செல்வப்பெருந்தகைஅவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர் கே.எஸ்.அழகிரிக்க எதிர்காலப் பணிகள் சிறக்கவும் -
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் -இன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் திரு. அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர்…
காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமார் அவர்களது செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். மேலும் இணைந்து பயணிப்போம்! INDIA-வை வெற்றிபெறச் செய்வோம்! என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்