திமுக தொண்டர்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர்; திமுக தொண்டர்கள் அதிமுகவுக்காக வேலை செய்வார்கள் - ஜெயகுமார்

By Velmurugan s  |  First Published Feb 17, 2024, 7:49 PM IST

திமுக தொண்டர்கள் அனைவரும் திமுக குடும்பத்தின் மீது அதிருப்தியில் உள்ளதால் அவர்கள் அனைவரும் அதிமுகவுக்காக தான் பணியாற்றுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ராயபுரம் பகுதி அதிமுகவினர் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டமும், சிறப்பாக செயலாற்றிய நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், வரும் 24ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தஞ்சை விவசாயிகள் உச்ச நீதிமன்றம் செல்ல விடாமல் தடுத்து காவிரிக்கு பெருத்த துரோகம் செய்தவர் கருணாநிதி மற்றும் திமுக அரசு. அணை கட்டுவதை தடுத்து நிறுத்தி இருந்தால் நிச்சயம் தண்ணீர் கிடைத்திருக்கும். முழுக்க முழுக்க சுயநலத்திற்காக இந்திரா காந்தி அம்மையார் சர்க்காரியா கமிஷன் மூலம் நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ளி விடுவார் என்ற காரணத்திற்காக காவிரி நதி நீர் உரிமையை விட்டுவிட்டார்கள்.

Tap to resize

Latest Videos

உங்களால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? அண்ணாமலைக்கு துரைவைகோ சவால்

இந்தியா கூட்டணியில் உள்ள ஸ்டாலின் அந்த கூட்டணியில் பங்குபெற, எங்கள் ஜீவாதார உரிமையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி என்றால் தான் கூட்டணியில் இருப்போம் என்று ஒரு கண்டிசன் போட்டு இருக்க வேண்டும், அதற்கு திராணி இருக்கிறதா திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, இல்லை. ஒரு முறை கூட வாய் திறந்து கர்நாடகா எங்களை வஞ்சிக்கிறது என்று சொல்லவில்லை, எங்களுக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு கொடுக்க வேண்டும் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு மனித தவறே காரணம்; ஆட்சியர் பேட்டி

சுயநலமாக உள்ள திமுக அரசு இன்று விவசாயிகளையும் தமிழக மக்களையும் வஞ்சிக்கிறது. மேகதாது அணையை கட்டினால் தமிழ்நாடே பாலைவனம் ஆகிவிடும். அந்த அணையை கட்டக்கூடாது என்று கடுமையாக அதிமுக எதிர்க்கிறது. ஓபிஎஸ் தான் திமுகவுக்கு ஊதுகுழல், பி டீம். சட்டமன்றத்தில் பேசியதை புரியாமல் சொல்கிறார். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஓட்டு மிஷின்கள் தயாரிக்க வேண்டும் அதை எப்படி செய்வீர்கள்? உள்ளிட்ட பத்து கேள்விகளை கேட்டுள்ளோம் என்றார்.

click me!