அண்ணா... அப்பா இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன்.! உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்பேன்- கண்கலங்கிய கனிமொழி

By Ajmal Khan  |  First Published Oct 9, 2022, 1:19 PM IST

கருணாநிதி இறந்த பிறகு திமுகவில் வெற்றிடம் உருவாக வேண்டும் என திமுகவின் பரம்பரை பகைவர்கள் எதிர்பார்த்தனர் , அவர்களின் சாம்ராஜ்யத்தை தகர்த்து , வெற்றிடத்தில் காற்று கூட இல்லாமல் , ஆழிப்பேரலையாக ஸ்டாலின் எழுந்து நின்றார் என கனிமொழி தெரிவித்துள்ளார்.


திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வுசெய்யப்பட்டார். இதனையடுத்து காலியாக இருந்த துணைப் பொதுச்செயலாளர் பதவி இடத்திற்கு கனிமொழி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து திமுக பொதுக்குழுவில் துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி உரையாற்றினார்,  திமுக உருவானோபோது பெரியாருக்கும் திமுக தலைவர்களுக்கும் இருந்த சிறிய இடைவெளி அண்ணாவை உறுத்தியது. எனவே பெரியார் போற்றும் வகையில் ஆட்சி நடத்த வேண்டும் என்றார் அண்ணா. அண்ணா முதல்வரான பிறகு ஆட்சி வந்து விட்டதே , கட்சி போய்விடுமோ என்று அஞ்சினார். ஆனால்  மாநில சுயாட்சி , இந்தி எதிர்ப்பு , சமூக நீதி  போன்ற அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்றி காட்டினார் கருணாநிதி என குறிப்பிட்டார்.

ஜேசிடி பிரபாகரன் அதிமுக வேஷ்டி கட்டியதும் இல்லை, கட்சிகாரரும் இல்லை..! இறங்கி அடிக்கும் இபிஎஸ்

Tap to resize

Latest Videos

 

கருணாநிதி இறந்த பிறகு திமுகவில் வெற்றிடம் உருவாக வேண்டும் என திமுகவின் பரம்பரை பகைவர்கள் எதிர்பார்த்தனர் , அவர்களின் சாம்ராஜ்யத்தை தகர்த்து , வெற்றிடத்தில் காற்றாக இல்லாமல் , ஆழிப்பேரலையாக எழுந்து நின்றார் ஸ்டாலின் என தெரிவித்தார். பெண்களை மீண்டும் சமையலறைக்குள் அடைக்க புதிய கல்விக் கொள்கை முயல்கிறது. அப்பா இல்லாத இடத்தில் இந்த நாடு உங்களை  வைத்து பார்க்கிறது , அண்ணா , அப்பா இல்லாத இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன்.  உங்கள் வழியில் , உங்கள் அடியில் பின்தொடர்ந்து ,  உங்கள் போராட்டம் அனைத்துக்கும் பின்னால் அணிவகுக்க நான் தயாராக உள்ளேன் என  கண்கலங்க நா தழுதழுக்க கனிமொழி உரையாற்றினார். 

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் அணிக்கு தாவிய மைத்ரேயன்..! அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கிய இபிஎஸ்

 

click me!