அண்ணாமலை புகாருக்கு ஒரே வரியில் பதிலடி கொடுத்த கனிமொழி.. என்ன தெரியுமா?

By vinoth kumar  |  First Published Apr 15, 2023, 9:36 AM IST

 திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுகவின் சொத்து என்று அண்ணாமலை கூறியது தொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் அவர் ஒப்படைக்க வேண்டும். திமுக பள்ளிகள் நடத்துவதாக கூறிய அண்ணாமலை அதற்கான ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும்.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை தக்க வைக்க திமுக மீது குற்றச்சாட்டு வைக்கிறார் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவினரின் ஊழல் பட்டியல் ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப்படும் என கூறியிருந்தார். அதன்படி திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதன்படி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நெருக்கமானவர்கள் என பலரின் சொத்து மதிப்புகள் மொத்தமாக 1.31 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக இருப்பதாகவும், கனிமொழி- ரூ.830,33 கோடி, ஜெகத்ரட்சகன் - ரூ.50,219,37 கோடி, எ.வ.வேலு - ரூ.5,442.39 கோடி, கலாநிதி வீராசாமி - ரூ.2,923.29 கோடி இருப்பதாக அந்த பட்டியலில் குறிப்பிட்டிருந்தார். அடுத்தக்கட்ட பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- 15 நாட்கள் தான் கெடு.. அப்படி இல்லைனா சட்டப்படி நடவடிக்கை.. அண்ணாமலையை அலறவிடும் ஆர்.எஸ்.பாரதி..!

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுகவின் சொத்து என்று அண்ணாமலை கூறியது தொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் அவர் ஒப்படைக்க வேண்டும். திமுக பள்ளிகள் நடத்துவதாக கூறிய அண்ணாமலை அதற்கான ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும். 15 நாட்களுக்குள் ஆதாரங்களை ஒப்படைக்காவிட்டால் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.எஸ்.பாரதி எச்சரித்திருந்தார். 

இதையும் படிங்க;- திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து? விவரம் இதோ.!

இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக எம்.பி.கனிமொழி;- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கனிமொழி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சில பேர் அரசியல் நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக திமுகவினர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை ஆவேசமாக கூறினார். 

click me!