அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கோவை செல்வராஜிக்கு புதிய பொறுப்பு.. தலைமை அறிவிப்பு..!

By vinoth kumar  |  First Published Apr 15, 2023, 8:47 AM IST

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் கோவை செல்வராஜ். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்த போது ஓ.பன்னீர்செல்வம் அணியில்  தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர் கோவை செல்வராஜ். 
 


அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜிக்கு திமுகவின் கழக செய்தி தொடர்பு துணை செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் கோவை செல்வராஜ். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்த போது ஓ.பன்னீர்செல்வம் அணியில்  தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர் கோவை செல்வராஜ். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை எவ்வளவு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன அதிர்ச்சி தகவல்!!


குறிப்பாக கோவையில் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக அரசியல் செய்து வந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமாரை தர லோக்கலாக இறங்கி கடுமையாக விமர்சித்து வந்தார். ஓபிஎஸ்யின் வலதுகரமாக இருந்து வந்தார். 

இதையும் படிங்க;- லஞ்சம் இப்போ அன்பளிப்பா ஆகிடுச்சா? அரசியல் கோமாளி_அண்ணாமலை.. பங்கமாய் கலாய்த்த திமுக ஐடி விங்..!

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஆனால், திமுக இணைந்து கிட்டதட்ட 4 மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த பதவியும் வழங்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது திமுக தலைமை அவருக்கு பதவி வழங்கியுள்ளது.  முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜிக்கு திமுகவின் கழக செய்தி தொடர்பு துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், மீனவர் அணி துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

click me!